உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திரவிடம் தென்சொல்லின் திரிபே

79

சொல்லையே ஆண்டிருக்கின்றார். விந்திய மலைக்குத் தெற்கில் வந்து குடியேறிய பிராமணரும், திராவிடப் பிராமணர் எனப்பட்டனர். இது நாடு பற்றியதேயன்றி இனம்பற்றியதன்று. மலேயாத் தமிழர், தென்னாப்பிரிக்கத் தமிழர் என்னும் வழக்கை நோக்குக. இம்முறை பற்றியே, தேவார மூவருள் ஒருவரான திருஞானசம்பந்தரும் திராவிட சிசு எனப்பட்டார். வட நாட்டு மொழி நூலறிஞர், முதற்கண், (ஆரிய) வேத காலத்து இந்திய வட்டார மொழிகளைச் சமற்கிருதத்திற்கு முந்தியுண்மை பற்றிப் பிராகிருதம் என அழைத்தனர். அவற்றில் அளவிறந்த ஆரியர் சொற்கள் கலந்து சிதைந்த வடிவிற் காணப்படுவது பற்றி, பிற் காலத்தார் அம்மொழிகளை வடமொழி (சமற்கிருத) வழியினவாகப் பிறழவுணர்ந்தனர். இதே காரணம் பற்றி, பழஞ்சேர நாட்டுத் தமிழ்த் திரிபாகிய மலையாளத்தை வடமொழியினின்று வந்ததாக இன்று சிலர் கூறுவது காண்க.

கி. மு. 3ஆம் நூற்றாண்டினராகக் கருதப்படும் காத்தியாயனர், பைசாசி, சௌரசேனி, மாகதி, மகாராட்டிரி எனப் பிராகிருத மொழிகளை நான்காகவே கொண்டனர். திராவிடத்தை அவர் கொள்ளாதது அறியாமையோ புறக்கணிப்போ அறிகிலம்.

ஒருகால் மகாராட்டிரியில் அதை அடக்கினர் போலும். பிற்காலத் தாசிரியர் சிலர் திராவிடி என்பது ஒரு சிறுதரப் பிராகிருதம் என்றனர். ஆயின் 19ஆம் நூற்றாண்டிலிருந்த பாபு ராசேந்திரலால் மித்திரா என்னும் வங்காளர், அதை சூர சேனியோடொத்த பெரும் பிராகிருதம் எனக் கூறினர்.

தமிழினின்று முதலாவது பிரிந்த திரவிட மொழி. தெலுங்காகும். அது வட திசையில் தோன்றியமை பற்றி வடுகு எனப்பட்டது. குமரிலபட்டர் காலத்தில் தெலுங்கு தனித்துக் கூறப்படுமளவு வளர்ச்சியடைந்துவிட்டதனால், அவர் அதுவரை திராவிடம் என்னும் பொதுப் பெயராலேயே வழங்கிய செந்தமிழையும் கொடுந் தமிழ்களையும், தெலுங்கு தமிழ் மொழி என்னும் பொருள்பட ஆந்திர திராவிட 'பாசை' என்றனர். தெலுங்கிற்குப் பின் தமிழினின்று பிரிந்த பெருமொழி கன்னடம் அதனால்

வடகலை தென்கலை வடுகு கன்னடம் எனக் கம்பராமாயணச் சிறப்புப்பாயிரச் செய்யுளொன்றில் கன்னடமும் சேர்க்கப் பெற்றது. 12ஆம் நூற்றாண்டிற்குப்பின், மலையாளம், துளு, குடகம் முதலிய பிற கொடுந் தமிழ்களும் பிரிந்து போயின. சென்ற நூற்றாண்டில் கால்டுவெல் திரவிட மொழிகள் பதின்மூன்றெனக் கணக்கிட்டார். இன்றோ அவை பத்தொன்ப தெனப் பரோ, எமனோ என்னும் இரு மேலை மொழி நூல் வல்லாரால் கணக் கிடப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் இந்தியா முழுதும் திரவிடம் பரவி யிருந்ததென்பதற்கு – இன்றும் பெலுச் சித்தானத்தில் பிராகுவீயும், வங்காளத் தில் இராசமகாலும் வழங்கி வருவதே போதிய சான்றாம். ஆரியர் வந்து வட இந்தியா முழுதும் பரவியபின், விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள மொழிக ளெல்லாம் திரவிடம் என்னுங் கொள்கையிருந்தது. அதனாலேயே, தெலுங்கு,