உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முகம்

83

இனி, பண்டாரகர் சாமிநாதையரும், பண்டைத் தமிழிலக்கியப் பதிப்பீட்டு வகையில் தலைசிறந்த தொண்டாற்றினரேயன்றி தனித்தமிழ் வி ருப்பினரல்லர். வடமொழியுயர்வும் தென்மொழித் தாழ்வும் என்றும் நிலவவேண்டுமென்னும் கொள்கையினர்; வடசொற்களாலன்றி வடவெழுத்து களாலும் தமிழின் தூய்மையைக் குலைத்தவர்; தமிழை இலக்கியச் செம்மொழியாக கொள்ள இசையாதவர்; மொழிநூற்பயிற்சி சிறிதும் இல்லாதவர்; ஆதலின் அவர் கூற்றும் கொள்ளத்தக்கதன்றென விடுக்க.

முகம் என்னும் சொல் தென்சொல்லேயென ஒன்பான் ஆண்டுகட்கு முன்னரே என் 'முதற்றாய்மொழி'யில் விளக்கியிருப்பினும், அதனைப் பாராமையாலோ, ஆராய்ச்சியின்மையாலோ, வடமொழி வெறிபற்றிய தமிழ் வெறுப்பாலோ, அடிமைத் தனத்தினாலோ, 'முகம்' வடசொல்லென இன்றும் ஒருசார் தமிழாசிரியர் வகுப்பிற் சொல்வதும், அதுகேட்டு மாணவர் மயங்குவதும், சில தேர்வாளர்மாணவர் போட்டித் தேர்வுகளில் முகம் எம்மொழிச் சொல் என வினவி உண்மையுரைப்பாரைத் தவறுவிப்பதும் வழக்கமாயிருந்துவருகின்றன. இது பலர்க்கும் இடர்ப்பாட்டை விளைத்தலின், இனிமேல் இப்பொருள்பற்றி ஐயுறவும் ஏமாற்றும் தருக்கமும் இல்லாதவாறு, முகம் என்பது தென்சொல்லேயென முடிந்த முடிபாக நாட்டுதற்கு எழுந்ததிக்கட்டுரையென்க.

முகம் என்பது தென்சொல்லேயெனக் கோடற்கு மறுக்கொணாச் சான்றுகள் வருமாறு :-

(1) தமிழில் மூலமும் பொருளும் முற்றும் பொருந்துதல் :- முகம் (முகு + அம்) = முன்பு, முன்னுறுப்பு, முன்பக்கம்.

முனை, நுனி, தோற்றம்.

முகப்பு, முகனை, முகச்சரக்கு, முகதலை, முகமண்டபம், முகமனை, முகவாசல், முகவுரை, உரைமுகம், துறைமுகம், நூன்முகம், போர்முகம் முதலிய வழக்குகளை நோக்கி முன்மைக் கருத்தே முகம் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் என்பது விளங்கும்.

உயிர்களின் (பிராணிகளின்) முன்பக்கத்திற் சிறந்த உறுப்பு தலையின் முன்புறமாதலின், அது முகம் எனப்பட்டது.

உயிர்களின் இயல்பான இயக்கம் அல்லது தோற்றம் முன்னோக்கியே நிகழ்தலின் முன்மைக் கருத்தில் தோற்றக் கருத்துத் தோன்றிற்று.

எ-கா :

முகம்

தோற்றம்

முகஞ்செய்தல் - தோன்றுதல்

முகம்பெறுதல்

முகு + உள்

- தோன்றுதல்

+ உள் - முகுள் - முகிள் = அரும்பு

முகிள் + அம் - முகிளம் = அரும்பு