90
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) இது வேய் - வே என்றும் திரியும்.
எ - டு: என்னவே ! இப்படிச் சொல்கிறீர்?
எ
பெயரீற்று ஓகார விளியசை ஏகார விளியொடு இணைந்தும் ஆகார விளியொடு கூடியும் வரும்.
எ-டு: அம்மேயோ, அண்ணாவோ.
‘ஆவோ’ இணை விளி லகரமெய் யடுப்பது முண்டு.
எ - டு: சாத்தாவோல்.
இதை ஒரு புடை யொத்து, ஏகார முன் விளியும் லகரமெய் யடுத்து ஏல் என நின்று, இரு பாற்கும் பொதுவாகும்.
ஏல் என்பது எல் - எல்ல - எல்லா என்று திரிந்து, அகப்பொருட் செய்யுள்களில் இருபாற் பொதுவிளியாய் வழங்கும்.
“மறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொல் நிலைக்குரி மரபின் இருவீற்று முரித்தே.
(தொல். பொருளி. 20)
'இது, கிழவன் கிழத்தி பாங்கன் பாங்கியென்னு முறைப் பெயராகிய சொல்பற்றிப் பிறந்ததோர் வழு அமைக்கின்றது.
‘இதன் பொருள் : முறைப் பெயரிடத்து இரு பாற்கும் பொருந்தின தகுதியை யுடைய எல்லா வென்னுஞ் சொல் புலனெறி வழக்கிற்குரிய முறைமையினானே வழுவாகாது, ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒப்ப உரியதாய் வழங்கும் என்றவாறு.
“கெழுதகை” என்றதனானே, தலைவியும் தோழியும் தலைவனைக் கூறியதே பெரும்பான்மை யென்றும், தலைவன் தலைவியையும் பாங்கனையுங் கூறுதல் சிறுபான்மை வழுவமைதி யென்றும் கொள்க. (உ-ம்.)
“அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேன் முதிர்பூண் முலைபொருத வேதிலாண் முச்சி யுதிர்துக ளுக்கநின் னாடை யொலிப்ப வெதிர்வளி நின்றாய்நீ செல்;
இனியெல்லா”
(கலித். 81)
எனத் தலைவியைத் தலைவன் இழித்துக் கூறலின் வழுவாயமைந்தது.
“எல்லா நீ
முன்னத்தா னொன்று குறித்தாய்போற் காட்டினை