உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

89

10. எல்லா

தனியுயிரான ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் இயற்கை நெடி லைந்தும் விளியசைகளாகப் பயன்படும். ஆதலால் விளியுருபாக அமையும். இவற்றுள் ஈ, ஊ என்னும் இரண்டும் பெரும்பாலும், முறையே இகர வுகரங்களின் நீட்டமாகவே யிருக்கும். எவ் வுயிரா யினும். சேய்மை விளியெல்லாம் நெடிலாகவே யிருத்தல் கூடும்.

விளியசைகள், முன்னசை பின்னசை என இருவகைப்படும். 'ஆ' முன்னசையாக வருவதில்லை. 'ஏ', 'ஓ' இரண்டும் முன்னசை யாகவும் பின்னசையாகவும் வரும்.

எ-டு:

ஏ. ஏ. முருகா! ஏ தங்கம் ! (முன்விளி)

ஏ அண்ணே! ஏ அரசே! (இருதலை விளி) தாயே! கடவுளே! (பின்விளி)

ஓ. ஓ ஐயா! ஓ பெண்ணே! (முன்விளி)

ஓ மாதோ! ஓ மன்னோ ! (இருதலை விO) அம்மோ! அண்ணோ! (பின்விளி)

இனி, பெயரொடு சேர்ந்தன்றித் தனித்தும் ஏயும் ஓவும் யகர மெய்யொடு கூடி விளியசையாக வரும்.

எ-டு: ஏய்! இங்கே வா. (சிறுவரையும் இழிந்தோரையும் நோக்கிக் கூறுவது. இது இருபாற்பொது .)

இது ‘ஏ’ என்றுங் குறுகும்.

எ- டு: ஏ!போ.

ஓய்! எங்கே போகிறீர்? (ஓத்த ஆடவரை நோக்கிச் சற்று மதிப்பாகக் கூறுவது).

இது சொற்றொடர் முன்னன்றிப் பின்னும் வரும்.

எ -டு: இங்கே பாரும் ஓய்!