உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

அட - அடி = சிறுமியையும் மனைவியையும் தோழியையும் இழிந்தோளையும் விளிக்குஞ் சொல். அடி மூழி ! என்ன செய்தாய்?

“நந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி’

உடைத்தான் + அடி = உடைத்தாண்டி.

+

(சித்தர் பாடல்)

“என்னடி நான்பெற்ற மங்கை” (அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து), எட்டி நில்லடி!

அடி - அடீ = (அடி என்பதன் நீட்டம்).

அடா - டா - ரா (தெ.). “ஏமிரா ஓரியென்பாள்” (காளமுகில்).

இக்கடை வாடா = தெ. இக்கட ராரா.

அடோ - அரோ = ஒரு மூவிட அசைச்சொல்.

“குயிலாலு மரோ”

“யாகா பிறபிறக் கரோபோ மாதிகும்

அன்றாம் தாம்தான் கின்றுநின் றசைமொழி”

அடே - வ. அரே. அடே - டே வ. ரே.

வ. அரே அரே - அரேரே -அரரே.

(நன். 441)

மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகரமுதலி அரே, அரரே, அரேரே,ரே என்னுந் திரிசொற்கள்பற்றிப் பின்வருமாறு குறிக்கின்றது:

அரே - ind. interjection of calling (VS).

அரரே - ind. a vocative particle (expressing haste) - L.

அரேரே - ind. (repetition fo are ) interjection of calling to inferiors or of calling angrily (L.).

G-ind. a vocative particle (generally used contemptuosly or to express disrespect. often doubled) - Kāv, kathas etc.

ind indeclinable.

-

VS = Vajasneyi Samhita வாஜஸ் நேயி ஸம்ஹிதா

L = Lexicographars (அகரமுதலியாளர்).

Kāv = Kavya literatrue (காவிய இலக்கியம்)