உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

95

ஆங்கிலர் நண்பரைக் காணும்போது மகிழ்ச்சி விளியாக ஆளும் ஹலோ(ஹல்லோ) என்னுஞ் சொல், எல்லாஎன்னும் தென்சொல் லொடு தொடர்புடையதே.

hallo, halloa, int., n., and v. i. Int. calling attention or expr. surprise; informal greeting; (n. and v.i. ) the cry hallo var. of earlier hollo.

halloo, int. inciting dogs to the chase. calling attention or expressing surprise; (n.) the cry. halloo (perh.)var. of hollo; (v.i. and t.) cry. hallooi esp. to dogs; urge on (dogs etc.) with shouts; shout (t. and i.) to attract attention. hallow, v.t and i. Chase with shouts; incite with shouts; shout to incite dogs etc. (ME.).

halowen, prok. f. OF. halloer:

hello, n., and v.i. hallo

holla, int . calling attention f. F.hola.

hollo, int. calling attention; (n.) the cry hollo' (conn.W.) holla.

hollo, hollow, holla, holloa. v. i. and t. shout (i. and t. ); call to hounds (as prec).

hullo, hulloa, int. used to call attention, express surprise or answer call esp. on telephone . cf. hallo.

‘ஏல்’என்பது முதல் ‘ரே’என்பது வரை காட்டப்பட்டுள்ளபல்வேறு சொற்களெல்லாம், ஒரே தொடர்புள்ள கொடிவழிச் சொற்கள் என்பது தெள்ளத் தெளிவாம்.

அவற்றுள், ‘ரே’ என்னும் இறுதிநிலைத் திரிசொல் மட்டும் வடமொழி யிலக்கியத்தில், அதிலும் பெரும்பாலும் பிற்கால இலக்கியத்திலும் அகர முதலிகளிலும் வழங்குவதும்; முந்துநிலைத் திரிசொல்லான எல்ல (எல்லா) என்பதை யொத்த ‘ஹல்லோ' என்னும் விளிச்சொல், ஆறாயிரம் கல் தொலைவிலுள்ள ஆங்கில நாட்டில் தொன்றுதொட்டு வழங்கி வருவதும் கவனிக்கத்தக்கன.

ஆங்கிலச் சொல் வேட்டை நாயை ஏவும் சொல்லாகப் பயன்படுத்தப்படினும், விளியளவில் ஒன்றே யென்பதை அறிதல்

வேண்டும்.

நூற்றுக் கணக்கான அடிப்படை ஆங்கிலச் சொற்கள் தென் சொல்லும் தென்சொற்றிரிபுமா யிருப்பதால், எல்லா என்னும் இருபாற் பொது விளிச்சொல் ஆங்கிலத்தில் வழங்கி வருதல்பற்றி ஐயுறுதற்கு எள்ளளவும் இடமில்லை.