உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

97

11. கலித்தல்

‘கலித்தல்’ என்பது பிறப்புக் கருத்து வேர்ச்சொல்.

உ ல் - உல்லரி = தளிர் (அக. நி.).

உல்லரி - வ. வல்லரி.

உல்-குல் - குள்- குள- குளவு - குளகு = இளந்தழை. குண்டன்ன மன்னா மகிழ்ச்சி” (நாலடி. 16).

-

குளவு களவு- களவம்- களபம்

களபமும்” (சிலப். 25 : 49).

மறிகுள

யானைக் கன்று.

மதகரிக்

ஒ.நோ : OS. calf, AS. cealf, OE. coelf, ME. kalf, calf, E. calf, OHG. chalb, ON. kalfr, Du. kalf, Icel. kalfr, Swed. kalf, Dan. kabr, Goth. kalbo, G. kalb, Skt. kalabha.

-

-

குள குழ குழம் = இளமை.

குழ = இளமையான. “மழவுங் குழவும் இளமைப் பொருள” (தொல்.உரி. 14) . குழமகன் = இளந்தலைவன். "குழமகனைக் கலி வெண்பாக் கொண்டு .... விளக்கவுரைத் தாங்கு” (இலக். வி. 858).

குழ வ. குட.

-

-

குழ குழவு = இளமை. குழவு குழகு = 1. குழந்தை. “குழகென வெடுத்துகந்த வுமை” (திருப்பு. 106).2. இளமைச் செவ்வி. “கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர் ” (சீவக. 2790.) 3. அழகு. "கொன்றை சூடிக் குழகாக... விளையாடும்” (தேவா. 468 : 7).

குழகு குழகன் = 1. இளையோன். "நின்மணக் குழகன்” (திருவிளை. திருமண. 44). 2. முருகன் (பிங்.). 3. அழகன். “கொட்கப் பெயர்க்குங் குழகன்” (திருவாச. 3 : 12).

குழகன் - க. ஹுடுக.

குழம் - குழந்து - குழந்தை = கைப்பிள்ளை. “குழந்தையை யுயிர்த்த மலடிக்கு" (கம்பரா. உருக்கா. 65). 2. இளமைப் பருவம். "குழந்தை வெண்மதி” (கம்பரா. ஊர்தேடு. 209).