உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

101

(சிலப். 25 : 52). 8. அச்சுக்கரு. “திருவுருவினைக் கருவினாற் கண்டு" (திருவிளை. இரச. 9). 9. வினைமுதற் கரணியம். “கருவா யுலகினுக்கு” (திருவாச. 10 : 14). 10. நடு. "உள்ளூர்க் கருவெலா முடல்” (கம்பரா. கிங்கரர். 44). 11. உட்பொருள். 12. கருப்பொருள். “தெய்வ முணாவே... கருவென மொழிப” (தொல். அகத். 18). 13. எண்கருமக்கரு. 14. நுண்ணணு “கருவளர் வானத்து” (பரிபா. 2 : 5).

ம. கரு.

கரு - கருந்து = மரக்கன்று (கோடை.வ.).

கரு - கருப்பு - கருப்பம்

வ. கருப்ப (garbha).

குல் - கல் - கலி. கலித்தல். = 1. உண்டாதல். “களியிடைக் கலித்த தென்ப” (ஞானா. 11).2. பிறத்தல். இவ் வெள்ளத்தில் மீன் நிறையக் கலிக்கும் (நெ.வ.).

குல் - குன் - குன்னி = மிகச் சிறியது. நன்னியுங் குன்னியும் என்பது எதுகை மரபிணைச் சொல். கூட்டத்திற்கு ஒருவராவது பெரியவர் வரவில்லை ; வந்தவை யெல்லாம் நன்னியுங் குன்னியும் (நெ.வ.). ஒ. நோ : kin, a dim. suf. E. manikin, ken, a dim. suf, Du. manneken, G. chen.

"

குன்னி - கன்னி =1. சிறுமி. 2. குமரி. "கன்னி தன்னைப் புணர்ந்தாலும்” (சிலப். 7. மன்னுமாலை)3. இளமை. “கன்னிப் புன்னை” (திருக்கோ. 177), கன்னிக்கோழி (உ.வ.). 4. என்றும் இளமையாயிருக்குங் காளி. “கன்னி செங்கோட்டம்” (கல்லா. 58). 5. புதுமை. “கன்னி நீலக்கட் கன்னி” (சீவக. 900).6. முதனிகழ்ச்சி. கன்னிவேட்டம். 7. அழிவின்மை. “கன்னிமா மதில்சூழ் கருவூர்” (திவ். பெரியதி. 2 : 9: 7), 8. குமரியாறு. “கன்னியழிந்தனள். கங்கை திறம்பினள்” (தமிழ்நா. 81). 9. கன்னியோரை

6

(பிங்.).

கன்னி - கன்னிகை = இளங்குமரி. 'கை' சிறுமைப் பொருட்

பின்னொட்டு.

ஒ.நோ : குடி (வீடு, கோயில்)

கோயில்).

குடிகை (சிறுவீடு சிறு

சிறுமையும் இளமையும் குறிக்கும் வடசொற்கள்

கந = 1. சிறிய. 2. இளமையான.

கதய, to make less, smaller, diminish.

கநா, a girl, maid. R.V. (இருக். வே.).

கநிஷ்ட, the youngest.