உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

12. மகன்

மகன், இளமைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட சொல்.

உல் - முல் - மெல்- மென்மை. இந். முலாயம் = மெல்லிய. பிறப்பு அல்லது தோற்றக் கருத்தினின்று முன்வரல், முன்மை, இளமை, சிறுமை, மென்மை, அழகு முதலிய கருத்துகள் கிளைக்கும். E. mellon, soft, L. mollis, soft, E. mollify, to make soft.

மெல்

-

=

மெல்லுதல் மெலிதாக்குதல்.

கடினமான

வுணவைப் பல்லால் அரைத்து

ஒ.நோ: L. mol, to grind; to make soft by grinding. L. mola, E. mill, building with machinery for grinding corn.

E. molar. f.L. molaris, mammal's back teeth serving to grind.

E. muller, tool used for grinding powders on slab, upper part of the millstone, f. ME. mulour f. mul, to grind. L. mola, millstone.

மெல் - மெலி - மெலிவு.

மெல் - மெல்கு. மெல்குதல் = மெலிதாதல்

மெல் - மெலு மெலுக்கு = மென்மை.

மெல் - மெது - வ. ம்ருது, E.smooth, OE. smoth, smethe, smeeth. க. மெது.

மெது - மெத்து. மெத்தெனல் = மெதுவாயிருத்தல்.

மெத்தெனவு = மென்மையான சொல், குணம், ஊறு, பொருள். “வெட்டெனவு மெத்தெனவை வெல்லாவாம்” (மூதுரை, 33). மெத்து - மெத்தை = மெதுவான இருக்கை, படுக்கை, தலை யணை. மெலுக்கு மெதுக்கு. மெதுக்கிடுதல் மென்மையாதல்,

மென்மையாயிருத்தல்.

மெது - மெதுவு - மெதுகு. மெது - மெதுப்பு.

=