108
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) ம. முள., து. முளெ., க.மொளெ, தெ. மொலக்க.
முள் - முர் - முருகு = 1 இளமை (திவா.). 2. அழகு (பிங்.). 3. எழுச்சி (திவா.). 4. முருகன். ‘“அருங்கடி வேலன் முருகொடு வளைஇ” (மதுரைக். 611). 5. தெய்வம். “முருகு மெய்ப்பட்ட புலத்தி போல” (புறம். 259). 6. வேலன் வெறியாட்டு. 'முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன்” (குறுந். 362 ). 7. திருவிழா. 'முருகயர் பாணியும்” (சூளா. நாட். 7). 8. திருமுருகாற்றுப்படை. “முருகு பொருநாறு” (தனிப்பா).
முருகு - முருகன். ம. முருகன். க. முருக (g).
—
-
முரு முறு முறி. முறிதல் = துளிர்த்தல். "முறிந்த கோல முகிழ் முலையார்” (சீவக. 2358).
முறி = 1. தளிர். 'முறிமேனி” (குறள்.1113). 2. கொழுந்திலை. "இலையே முறியே தளிரே தோடே” (தொல்.மரபு. 88).
முள் - முண்டு. முண்டுதல் = வித்தின் முளை முளுத்தல் அல்லது முட்டுதல்.
முள் முட்டு = இளம் பிஞ்சு. முட்டுக்காய் = முற்றாத இளநீர். - =
முட்டுக் குரும்பை = சிறு குரும்பை.
முட்டு -மொட்டு = 1. அரும்பு. “மொட்டறா மலர்” (திருவாச. 29
- 8) . 2. தேரின் கூம்பு. மாமொட் டொடிந்து ... மான்றேர் சிதைய” (பாரத நான்கா நாள்.24).
-
=
மணமாகாத
மொட்டு மொட்டை. மொட்டைப் பயல் இளைஞன், இளவட்டம் (பொதுவாக இழிவுக் குறிப்பு).
-
முள் - முண் முண. முணமுணத்தல் பேசுதல்.
=
மெதுவாக வாய்க்குட்
முண் - முணு. முணுமுணுத்தல் = மெதுவாக வாய்க்குட் பேசுதல். முணு முணுக்கு. முணுக்கு முணுக்கெனல் = சிறு குழவி சிறிது சிறிதாகத் தாய்ப்பா லுண்ணுதல்.
6
முணமுண - மொணமொண மொணமொண வெனல் = வாய்க்குட் சொல்லுதல். “சுற்றிவந்து மொணமொணென்று சொல்லு மந்திரம் ஏதடா” (சிவவாக். பா.).
முணுக்கு - முடுக்கு = 1. சிற்றளவான குடிநீர். 2. சிறுதெருச் சந்து.
-