தனிச்சொற்கள்
109
முடுக்கு - முடுக்கர்= குறுந்தெரு. "முடுக்கரும் வீதியும் ” (சிலப். 5 : 182).
முடுக்கு - விடுக்கு
சிற்றளவான குடிநீர்.
முண் - மண் - மணி = சிறியது. மணிக்கயிறு, மணிக்காக்கை, மணிக்காடை, மணிக்குடல். மணிக்கை, மணிப்புறா முதலிய கூட்டுச் சொற்களை நோக்குக. மண் - மண்ணை = மண்ணை = இளமை (பிங்.).
மணி மணி = 1. சிறியது. 2. மாணவன், பள்ளிப்பிள்ளை. 3. மணமாகாதவன். 4. குறளன். “கருமாணியாயிரந்த கள்வனே” (திவ். இயற். 2: 61), “மாணிக் குறளுரு வாய மாயன்” (திவ். பெரியாழ். 5 : 28 5).
மாணி -மாணவன்
-
வ. மாணவ.
மாணவன் வ. மாணவக - த. மாணாக்கன்.
-
முள் - முழு - முகு. ஒ. நோ : தொள் - தொழு தொகு.
-
-
—
முகு முகுள் முகுளம் = 1. அரும்பு. “பங்கய முகுளந் தன்னைக் கொங்கையாப் படைத்த” (திருவாலவா. 4 : 14). 2. ஐந்து விரலுந் தம்மில் தலைகுவிந்து உயர்ந்து நிற்கும் இணையா வினைக்கை வகை (சிலப். 3:8, உரை). 3. (ஓகம் ) இருகாலும் ஒக்கவைத்து மண்டலமாக இருக்கும் இருக்கை வகை (தத்துவப். 109, உரை). 4. மூளையின் பின்பகுதியான முள்ளந்தண்டுக் கொடியின் குவடு (சிகரம்), (இங்.வை. ப. 27) .
―
முகுளம் வ. முகுல.
..
முகுள் - முகுளி. முகுளித்தல் = குவிதல். “முகுளிக்கும். அரவிந்த நூறாயிரம்” (தண்டி. 62).
-
முகுள் - முகுளம்
முகுடம் = முடிக்கலம். "முகுடமும் பெருஞ்சேனையும்” (பாரத. குரு. 14). 2. முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று (திவா.).
முகுட - வ. முகுட்ட.
முகுளம் - முகுரம் = தளிர் (சங். அக.).
முகுரம் - வ. முகுர.
முகுடம் ம் - - மகுடம் = 1. மணிமுடி. “அரக்கன்றன் மகுடம்” (கம்பரா. முதற்போ. 246). 2. தலைப்பாகை வகை. 3. கோவில் தேரின் கும்பம். 4. ஓலைச் சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை. 5. மாதர் காதணி வகை. 6. மத்தளம் முதலியவற்றின் விளிம்பு. 7. பறைவகை.