தனிச்சொற்கள்
-
115
மக மகள் = 1. பெண்குழந்தை. 2. புதல்வி. "நல்கூர்ந்தார் செல்வ மகள்” (கலித். 56). 3. பெண்டு. “ஆயமகள் நீயாயின்” (கலித். 107).4.மனைவி. “மனக்கினி யாற்கு நீமகளாய தூஉம்
21:29).
(மணிமே.
மகள் - மகடு- மகடூஉ. “மகடூஉ வறிசொல் ” (தொல். சொல்.2).
—
.
மக மகவு = 1. குழந்தை. “மகவு முலைவருட” (கம்பரா. தைல. 13.). 2. குரங்கின் குட்டி (தொல். மரபு. 14).
-
மகன்- (மகர்) - மகார் (பலர்பால்) = 1. புதல்வர். 'அவுணர் கோன் மகார்” (கந்தபு. மூவாயிர. 58). 2. சிறுபிள்ளைகள். "இளந்துணை மகாரின்" (பதிற்றுப். 71:7).
மகார் - மார். (பலர்பாலீறு). எ-டு: அண்ணன்மார், தாய்மார். மகள் - மகளிர் (பலர்பால்) = பெண்டிர். “வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்தலல்லது” (புறம். 10).
மகன் - மான் - மன் (ஆண்பாலீறுகள்).
எ-டு : பணிமகன், பெருமான், செறுமன். மகள் - மாள் (பெண்பா லீறுகள்).
67- டு : பணிமகள், வேண்மாள்.
மக + கள் = மக்கள் (மரூஉப் புணர்ச்சி ).
மக்கள் - (இருபாற் பொதுப் பலர்பாற் பெயர்) = 1. சிறு பிள்ளைகள்: எ-டு: ஆண்மக்கள், பெண்மக்கள், இருபால் மக்கள். 2. வளர்ச்சியுற்ற மாந்தர். எ-டு:ஆண்மக்கள் (ஆடவர்), பெண்மக்கள் (பெண்டிர்), இருபால் மக்கள் (இருபான் மாந்தர்).
“மக்கள் தாமே ஆறறி வுயிரே”
“உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
(தொல். மரபு. 33)
(தொல். கிளவி. 1)
என்று தொல்காப்பியங் கூறுவதால் இலக்கண நூலிலும் அறநூலிலும் பண்பட்ட மாந்தரே மக்களென்றும், பண்படா மாந்த ரெல்லாம் மாக்களென்றும், குறிக்கப்படுவரென்பது போதரும்.
எ-டு:
“விலங்கொடு மக்க ளனையர் இலங்கு நூல் கற்றாரோ டேனை யவர்.
“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென்."
(குறள். 410)
(60g 420)