உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) மகன் என்னும் தென்சொல், கோதிய (Gothic) மொழியில் மகுஸ் (magus) என்றும், கேலிய (Gaelic) மொழியில் மக் (mac) என்றும், திரிந்து வழங்குகின்றது.

"Mac (mak) A Gaelic word signifying son, and prefixed to many surnames, as Mac Donald, Mac Grigor, &c. It is synonymous with son in names of Teutonic origin.... It is allied to Goth magus. a son. fem. magaths (G. magd. a maid)" I.D. E.L. Vol. III p.91.

Gadhelic (Gaelic), a. Of or pertaining to that branch of the Celtic race which comprises the Erse of Ireland. the Gales of Scotland and the Manx of the Isle of Man.

- The Imperial Dictionary of the English Language, Vol. II, p.352.

Goth, n. One of an ancient Teutonic race of people, first heard of as inhabiting the shores of the Baltic.-Do. p. 413.

Mac என்னும் கேலியச் சொல் Mc என்று குறுகியும் வழங்கும். எ-டு:Mc Adam.

மகன் - மான் - மன் = மாந்தன்.

மன்பது = மக்கட்டொகுதி. 'மன்பது மறுக்கத் துன்பங் களை வோன்” (பரிபா. 15 : 52).

மன்பது

-

மன்பதை

=

1. மக்களினம். "மன்பதை காக்குநின் புரைமை” (புறம். 210). 2. படைமக்கட் டொகுதி. "மன்பதை பெயர” (பதிற்றுப். 77: 3).

மன் - Teut. man, Skt. manu.

"MAN, a human being. (E). ME. man, Chaucer, C.T. I., 43. AS. mann, also mon; Grein ii, 105 + Du man; Icel. madr (for manur): also man; Dan. mand (with excrescent d); Goth. mann; a, G. mann; (the G. mensch mannich, i.e. mannish, human). Allied to Skt manu. Vedic manus a man, B. connected by some with Skt. man, to think. See Mind. But it is unlikely that the orig. sense could have been "thinker"

- Skeat's Etymological Dictionary of the English Language, p.358.

மன்

-

வ. மது.

மநு, thinking creature, man, manu.

மநுஷ, a man.

மநுஷீ, a woman.

மநுஷ்ய, human, manly; human being, man.