தனிச்சொற்கள்
மநுஷ்வத், as a man.
மந்வந்தர (nt), age of a manu.
மாநவ, Descended from or belonging to man or manu.
மாநவஸ்ய, to act like man.
மாநவீய, descended or deirved from manu.
மாநுஷ்ய, human nature or condition.
117
- Monier William's Sanskrit - English Dictionary
Man என்னும் ஆங்கிலச் சொலலையும் மநு என்னும் சமற்கிருதச் சொல்லையும் முறையே mind, மநஸ் என்னும் சொற்களோடு தொடர்புபடுத்தி thinking animal, thinking creature என்று மேலையர் சிலர் பொருள்கூறுவர். அது தவறென்பது அடுத்த கட்டுரையில் விளக்கப்படும்.
இடைச் சேர்ப்பு:
-
முகு முக்கு = இருதெரு கோணம்படக் கூடும் மூக்குப் போன்ற மூலை. முக்குவேறு; முடுக்கு (சந்து) வேறு.
முக்கு - முக்கை = ஆறு திரும்பும் அல்லது ஈராறு கூடும் இடத்து முக்குப் போன்ற மூலை.
முக்கு - மூக்கு = 1. முகத்தின் முன் நீண்டுள்ள உறுப்பு. 2. பறவை யலகு. 3. யானைத் துதிக்கை. 4. கலங்களின் வாயில் மூக்குப்போல் நீண்டுள்ள உறுப்பு. 5. இலைநுனி. 6. கொண்டைக் கடலைப் பயற்றின் முனை. 7. வித்தின் முளை. 8. வண்டிப்பாரின் மூக்கு வடிவான முனைப்பகுதி.
ம.,தெ.,து.மூக்கு., க. மூகு (g).
மூக்கு மூக்கன்
மூக்கன் = 1. எடுப்பான மூக்குள்ளவன். 2. மீன்கொத்தி.