உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

முன்னம் - முனம் - மனம் = கருதும் புலம். முன் - மன் = சூழும் மந்திரம் (பிங்.).

மன்னுதல் = கருதுதல், சூழ்தல்.

மன் + திரம் = மந்திரம்.

ஒ.நோ : மன் +து = மன்று - மந்து - மந்தை.

119

மந்திரம் = 1. திண்ணிய எண்ணம் (பிங்.), மனவுறுதி. 2. சூழ்வு (ஆலோசனை) (பிங்.). 3. அரசியல் பற்றிய அரசன் அல்லது அமைச்சன் சூழ்வு. 4. அமைச்சர் குழு, மந்திரிகள் சவை. “மன்னவன் தனக்கு நாயேன் மந்திரத் துள்ளேன்” (கம்பரா. உருக்காட். 31). 4. மறைமொழி.

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப”

(தொல். செய். 176)

5. திருமூலர் திருமந்திரம் போன்ற நூல். 6. சிவபோற்றி (சிவாயநம) என்பது போன்ற உருப்போடும் திருமொழி. 7. திருவைந்தெழுத்தி லுள்ள உயிர்நாடி யெழுத்து, சி. “நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்” (திருமந். 2672.) 8. வசிய மந்திரம். 9. சாவிப்பு மந்திரம். 10. பேய் மந்திரம். 11. LOTUL.

மந்திரம் -வ. மந்த்ர (mantra).

மந்திரக்கலப்பை = மந்திர மன்றாட்டிற்குரிய பண்டங்கள். “மானுரி மடியு மந்திரக் கலப்பையும்” (பெருங். உஞ்சைக். 36 : 226).

மந்திரக்காரன் = மந்திரஞ் செய்பவன் (W.).

மந்திரக்கிழவர் = சூழ்வுக்குழுவார். “மந்திரக் கிழவரை வருகென் றேவினான்” (கம்பரா. அயோத். மந்திர. 4).

மந்திரக்கூறை = பூசைப்பட்டு (W.).

மந்திரக் கோட்டி

=

சூழ்வுக்குழு. “மனமுணக் கிளந்த மந்திரக்

கோட்டியுள்”(பெருங். உஞ்சைக். 36 : 277 ).

மந்திரக்கோடி

=

L

மந்திர வாழ்த்தொடு மணமகள் பெறும் புடைவை. “மந்திரக் கோடி யுடுத்தி” (திவ். நாய்ச். 6 : 3). மந்திரக்கலை = மந்திர நூல்.

மந்திரக்காவி = செங்காவி தோய்த்த துறவியுடை (W.).

மந்திரச் சுற்றம்

=

மந்திரக் கிழவர். “மந்திரச் சுற்றமொடு

மன்னனும் விரும்பி” (மணிமே. 28 : 184).