உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

=

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) மந்திரச்சாலை அரசன் அமைச்சரொடு சூழ்வுசெய்யும் தனிமண்டபம். "மாடக் கோயில் மந்திர சாலை சேர்ந்தான்” (சூளா. குமார.41).

மந்திரத்தோழி = தலைவியின் அணுக்கப் பாங்கி. 'யாப்பியா யினியெனு மந்திரத் தோழியொடு” (பெருங். மகத. 9: 54). மந்திரத்தெய்வம் = மந்திரத்திற்குரிய தெய்வம்.

மந்திர நாயகன் = மந்திரத் தெய்வம்.

மந்திரப் படலம் = அரசன் சூழ்வு செய்வதைக் கூறும் பாவியப்

(காவியப்) பகுதி.

மந்திரப்

பொருத்தம்

மந்திரத்திற்குமுள்ள பொருத்தம்.

மந்திரம்

ஓதுபவனுக்கும்

மந்திரப் பெருள் = மந்திரச் செய்தி. “மந்திரப் பொருள்வயின் ஆ அ குநவும்” (தொல். எச்ச. 53).

மந்திர பதம் = மந்திரிப் பதவி.

மந்திரம் பண்ணுதல் = 1. மந்திரம் ஓதுதல். 2. பேய்மந்திரஞ் செய்தல். 3. மாயஞ் செய்தல்.

மந்திரமாலை = திருமூலர் திருமந்திரம். "ஞானம் முதல் நான்கு மலர் நற்றிருமந் திரமாலை” (பெரியபு. திருமூல. 26).

மந்திரமைந்து = ஐந்தெழுத்து மந்திரம். "மந்திரமைந்து அதன் செவிச் செப்புகின்றான்” (சீவக. 945).

மந்திரர் = அமைச்சர் (சூடா.).

மந்திரவாள் = 1. மந்திர ஆற்றல் வாய்ந்த வாள் (W.). 2. அரசன் வாள் (W.).

மந்திரவாளி = மந்திரக்காரன்.

மந்திரவோலை = அரசன் திருமுகம். "மந்திர வோலை போக்கிய வண்ணமும்” (பெருங். மகத. 2: 39).

மந்திரம் - மந்திரி.

=

மந்திரித்தல் (செ. குன்றாவி.) 1. சூழ்தல் (ஆலோசித் தல்).“மகட்பேசி மந்திரித்து” (திவ். நாய்ச். 6 : 3 ). 2. மந்திரத்தால் ஊழ்குதல். “மந்திரிப்பார் மனத்து ளானை” (தேவா. 590 : 4), 3. மந்திர வலிமையால் எதிரியை அடக்குதல் அல்லது பிறரைக் கட்டுப்படுத்து தல். 4. மந்திரத்தால் நோய் நீக்குதல். 5. மந்திரம் ஓதிக் குழையடித்தல். 6. மந்திர ஆற்றலுண்டாக்குதல். நீரை மந்திரித்துக் கொடுத்தான்.