தனிச்சொற்கள்
121
(செ.கு. வி.) மந்திரம் ஓதுதல். மந்திரித்தல் என்னும் வினைச் சொல் வடிவம் வடமொழியில் இல்லை.
மந்திரி = (பெ.) 1. அமைச்சன். “பழுதெண்ணு மந்திரியின்” (குறள். 639). 2. வருங்காலச் செய்தி சொல்வோன். “மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்” (வெற்றிவேற்கை, 8)
மந்திரி = வ. மந்த்ரின் (mantrin).
தொல்காப்பியம் அஷ்டாத்யாயீ என்னும் பாணினீயத்திற்கு முற்பட்ட கி.மு. 7ஆம் நூற்றாண்டு நூல். அது ஆரியர் வருகைக்கு முற்பட்ட குமரிநாட்டு முழுத் தூய தமிழ் நூல்களின் தொகுப்பென்பது பனம்பாரனார் சிறப்புப் பாயிரத்தாலும் தொல்காப்பியரின்
கூற்றுகளாலும் அறியப்படும்.
“பெயர்நிலைக் கிளவியின் ஆஅ குநவும் திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும் தொன்னெறி மொழிவயின் ஆஅ குநவும் மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும் மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் அன்றி அனைத்தும் கடப்பா டிலவே”, “பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்
(எச்ச. 59)
யாப்பின் வழிய தென்மனார் புலவர்”,
"எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை யில்லன ஆறென மொழிப”, “அவைதாம்
நூலி னான உரையி னான
நொடியொடு புணர்ந்த பிசியி னான
ஏது நுதலிய முதுமொழி யான
மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான”,
66
‘நிறைமொழி மாந்தர் ... மந்திரம் என்ப”
(செய். 78)
(செய்.162)
(செய். 163)
(செய். 176)
என்னும் நூற்பாக்களால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழில் மந்திரம் இருந்ததென்பதும், 'வாய்மொழி' என்பது போன்றே ‘மந்திரம்’ என்பதும் தென்சொல் என்பதும், தெற்றெனத் தெரிந்து கொள்க.
சிலர், வாய்மொழி யென்றொரு சொல் தமிழிலிருப்பதால், ‘மந்திரம்’ என்பது வடசொல்லெனக் கருதுவர். தமிழ் முன்மொழியும்