132
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)
15.
ч (260OTIT) புகா (உணா)
என்பது
உட்கொள்ளுதல்;
அதாவது,
உண்ணுதல் ஒன்று இன்னொன்றைத் தன்னுள் இழுத்தல் அல்லது சேர்த்தல், வாய்வழி வயிற்றிற்குள் ஒன்றை இடுதலும், நிலம் நீரை உறிஞ்சுதலும், பாதம் செம்பஞ்சுக் குழம்பு நிறத்தைப் பெறுதலும், உண்ணுதலே. இவற்றுள் முதலதே மக்கள் பேச்சிற் பெருவழக்கானது. இறுதியது, சேர்தலின் அல்லது சேர்த்தலின் வகைகளுள் ஒன்றாகும்.
உணவை
உண்ணுதல் (பெருவழக்கு) = I (முதற்பொருள்) : உட்கொள்ளுதல். II (வழிப்பொருள்): 1. நுகர்தல் (அனுபவித்தல்). 'தண்கடற் சேர்ப்பநீ யுண்டவென் னலனே’ (குறுந். 236). 2. கவர்தல். “அவுண னாருயிரை யுண்ட கூற்றினை” (திவ். திருக்குறுந். 2). 3. இசைவாதல். “ஓசை யூட்டினு முண்ணாத வாறும்” (யாப். வி.ப. 97). 4. ஒரு வினையின் பயனையடைதல். கோவலன் பொற்கொல்லனாற் கொலையுண்டான் (கொல்லுண்டான்.).
உண்ணுதல் என்பது அடிப்படைப் பொருளில் உட்கொள்ளுத லாதலின், பெரும்பாலும் உள்ளிடத்தை அல்லது உட்புகுத்தலைக் குறிக்குஞ் சொற்களினின்றே உண்ணுதல் வினைச்சொற்கள் தோன்றி யுள்ளன.
—
எ-டு: உள் -உண் உணா - உண-உணவு.
புகுத்தல் = 1. உட்செல்ல விடுதல். “வாயில் புகுப்பினும்’” (தொல். பொருள். 149). 2. உட்செலுத்துதல். 3. உண்ணுதல். இப் பொருளில் இச் சொல் வழக்கற்றது.
-
புகு - புகவு = 1. உட்செல்கை. “கழுது புகவயர” (ஐங்குறு. 314). 2. உணவு. “பழஞ்சோற்றுப் புகவருத்தி” (புறம். 395).
புகு - புகா = உணவு. “புகாஅக் காலை” (தொல். பொருள். 107). புகா - புவா - புவ்வா = சோறு, உணவு (நாட்டுப்புற வழக்கு). புக + அட்டு (ஒட்டு) = புகட்டு. புகட்டுதல் = 1. உட்செலுத்து தல். 2. ஊட்டுதல். தாய் குழவிக்குப் பாலூட்டினாள். 3. அறிவுறுத்து