தனிச்சொற்கள்
133
தல். “அல்லம தேவன் சரிதத் தீம்பால்........புகட்டி னானால்” (பிரபுலிங். புகட்டினானால்”(பிரபுலிங். துதி. 11), “செவிதிறந்து புகட்ட” (திருவிளை. விடையிலச். 4).
ஒட்டு என்னும் துணைவினையை, தூங்கவொட்டார், வரவொட்டார் என்னும் எதிர்மறை வினைகளிற் காண்க. ஒட்டுதல் = பொருந்துதல். இசைதல். ஒட்டு - அட்டு. எ -டு : வரட்டு (வர + அட்டு) போகட்டு (போக + அட்டு). இவை ஒருமை யேவல். வரட்டும், போகட்டும் என்பன பன்மை யேவல்.
=
புகட்டு -போட்டு (உ.வ.). குழந்தைக்கு மருந்துபோட்டு.
புக + விடு = புகடு. ஒ.நோ: போகவிடு - போகடு - போடு.புகடுதல் வீசியெறிதல். இதற்கு ஊட்டுதற் பொருளில்லை.
புகு - Gk.பகு (phag) phagin, to eat, devour; phagema, food; phagas, phagōn. glutton.
phage (phag), combining from meaning 'eater' as in xylophage. phagedena, gangrene, L. phagedaena fr. Gk. phagedaina, cancer, lit. voracity fr. phagein, to eat.
phago, combining form meaning 'eating' as in phagocyte.
phagous, combining form meaning 'eating feeding on' as in creophagous, xylophagous, Gk. phagos, ‘eater of’.
phagus. combining form meaning ‘eating', as in sarco phagas. L. fr. Gk. sarkophagos, orig. flesh - consuming (stone).
phagy, combining form meaning eating of' (something specified), as in anthropophagy, geophagy.
phagia, same as 'phagy'
உகரமுதல் அகரமுதலாகத் திரிவது பெரும்பான்மை. தமிழில் மூச்சொலி (aspirate) இல்லை. தமிழ் மெய்கள் பிற மொழிகளில் மூச்சொலி மெய்யாகத் திரிவதுண்டு.
எ-டு: கல் - khal (பிராகுi).
இங்ஙனம் தமிழ்ச்சொல் தமிழுக்கு அகப்புறமான திரவிடத்தி லேயே மூச்சொலி பெறும்போது அதற்குப் புறமான ஆரியத்தில் அதைப் பெறுவது இயற்கைக்கு மாறானதன்று.
ph என்னும் இணைவரி அல்லது கூட்டெழுத்து, ஆங்கிலத்தில் f’ என்றொலிப்பினும், கிரேக்கக்தில் மூச்சொலி கூடிய பகரமே (ப்ஹ) என்பதை அறிதல் வேண்டும்.