உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

E. quadruped, four - footed animal., f. F. quadrapede f. L. quadrupedis, quadri, four. pedis, foot.

E. tripod, stool, table, utensil, resting on three feet or legs. L. and Gk. tri, three. podos, foot.

E. tripos, n. (Camb. univ.) (List of successful candidates in) honours examination. [as tripod. with ref., to steel on which B.A. sat to deliver satirical speech at commencement f. Gk. tri, three. podos, foot.

கடைக்கழகச் செய்யுள்களில் பாதம் என்னும் சொல் வர வேண்டிய இடத்தில் அடி (அல்லது தாள்) என்னுஞ் சொல்லே வந்திருத்தலால், சிலர் பாதம் என்னுஞ் சொல் வடசொல்லோ என ஐயுறக் கூடும். தொல்காப்பியமும் பதினெண் மேற்கணக்கும் திருக்குறளும் நூலும் பனுவலும் தனிப்பாடற்றிரட்டுமே யன்றி,அகர முதலிகளல்ல. ஆரியர் வருகைக்கு முற்பட்ட எழுநிலச் செய்யுள் இலக்கியமனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. சில பொருள்கட்கு, உலக வழக்குச் சொல்லும் இலக்கிய வழக்குச் சொல்லும் தொன்றுதொட்டு தொன்றுதொட்டு வேறுபட்டே வந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, காடை என்னும் உலக வழக்குச் சொல்லிற்குத் தலைமாறாகக் குறும்பூழ் என்னுஞ் சொல்லே கழகச் செய்யுள்களில் வழங்கியிருத்தல் காண்க.

பாதம் என்பது, நிலத்திற் பதிதற் கேற்றவாறு அகன்று தட்டையா யிருத்தல் வேண்டும். பாதம் வைத்த விளக்கு என்னும் வழக்கை நோக்குக. அடி என்பது, அடிப்பகுதி, அடியுறுப்பு, அடிப்பக்கம் என்னும் மூவகைப் பொருளை, எல்லாப் பொரு ளொடும் பொருந்தப் பொதுப்படக் குறிப்பதால், பாதம் என்னுஞ் சொல்லை ஒத்ததன்று. பெட்டிக்கு அடியில் என்பதைப் பெட்டியின் அல்லது பெட்டிக்குப் பாதத்தில் என்று சொல்லும் வழக்கின்மை காண்க.

பாதம் என்னும் சொல்லிற்கு மூலமான பதி என்னும் வேர்ச் சொல்லையும் அதன் தோற்ற வரலாற்றையும் வேறெம்மொழியிலும் காணமுடியாது. மக்கள் குமரிநாட்டினின்று வடக்கும் கிழக்கும் மேற்கும் சென்றவராதலால், தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமையை உணர்தல் வேண்டும்.

இவ்

வரலாறும் மொழிநூலும், வுண்மையைக் கோபுர வுச்சியினின்று குமுறிச் சாற்றுகின்றன. எவ்வகை யெதிர்ப்பும் இன்னும் ஈராண்டிற்குள் இம்மியும் இல்லாதுபோம்.