தனிச்சொற்கள்
147
18. புரி (வளை)
உல் - உல. உலத்தல் = வளைதல், திரள்தல்.
உல - உலம் = உருட்சி, திரட்சி.
உலக்கை = உருண்டு திரண்டு நீண்ட குத்துக்கருவி அல்லது ஆட்டுக்கருவி.
உல - உலவு. உலவுதல் = வளைதல், திரிதல், சுற்றுதல்.
உலவு - உலாவு. உல-உலா- உலாத்து.
உலவு - உலகு = சுற்றும் கோள். உலகு - உலகம் = பேருலகு. 'அம்’ பெருமைப்பொருட் பின்னொட்டு.
உலகம் - வ. லோக - இந். லோக்.
உலவு - உரவு. உரவுதல் = உலாவுதல். உலாவு - உராவு.
உல்-உர்உருள் - உருளி, உருளை, உருண்டை - உண்டை. உருளை
-
உருடை - ரோடை - ரோதை - L. rota.
உல் - புல் - புரி - புரள் - புரளி, புரண்டை - பிரண்டை.
புரள் - புரட்டு- புரட்டல் - புரட்டி, புரள் - பிறழ்.
-
-
புர் - புரி. புரு புருள் - புருளை - புருடை - பிருடை.
புர் - புரு - புருவு - புருவம் = கண்மீ வளைவு.
-
-
வ. ப்ருவ (bhruva), ON. brun, OE. bru, E. brow.
புரிதல் = வளைதல், சூழ்தல், திரும்புதல், முறுகுதல்.
கோட்டை,
புரி = முறுக்கு, முறுக்கிய இழை, முறுக்கிய கயிறு, சுருள், சுரி, உள் திருகிய சங்கு, நகரைச் சூழ்ந்த மதில், மதில் சூழ்ந்த கோட்டையுள்ள அல்லது மதில் சூழ்ந்த நகர் அல்லது நகரம்.
எ-டு. : மதுராபுரி, மயிலா புரி.
இடம்புரி = வலமிருந்து இடமாக உள்வளைந்த சங்கு.