உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

=

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) கொடும்புரி அறும் நிலையிலுள்ள கம்பியின் அல்லது முடிச்சுப்படும் நிலையிலுள்ள கயிற்றின் கொடுமுறுக்கு. முப்புரி = மூன்று முறுக்கிழை.

வலம்புரி = இடமிருந்து வலமாக உள்வளைவுள்ள சங்கு. வைக்கோற்புரி = முறுக்கிய வைக்கோற் பழுதை.

புரிகுழல் (புரிக்குழல்) = கடை குழன்று சுருண்ட கூந்தல். புரிக்கூடு = வைக்கோற் புரியாற் கட்டிய நெற்கூடு.

புரிகட்டியிழுத்தல் = தண்டனையாகக் காலில் வைக்கோற்புரிகட்டித் தெருத்தெருவாயிழுத்தல்.

புரிசடை = திரண்டு சுருண்ட சடை.

புரி திரித்தல் = புரி முறுக்குதல்.

புரி தெறித்தல் = கயிறு அறுகை.

புரி நூல் = மார்பிலணியும் முப்புரி நூல்.

புரி பாய்ச்சுதல் = சிறு கயிற்றை முறுக்க ஒழுங்குபடுத்துதல். புரியணை = மண்பாண்டம் வைக்கும் வைக்கோற் புரியணை. புரிமுகம் = நகர் முகப்பிலுள்ள கோபுரம்.

புரிமுகம் = சங்கு (வலம்புரி அல்லது இடம்புரி.)

புரிமுறுக்கு = இழை முறுக்கு, மலராப் பேரரும்பு நிலை.

புரி வலித்தல்

=

கட்டுதல்.

புரிவளை = முறுக்கு வளையல்.

புரிவிடுதல் = கயிறு திரிக்கப் புரியை முறுக்குதல்.

புரி - புரிசை = நகரைச் சூழ்ந்த மதில்.

புரி - பரி. பரிதல் = முறிதல், அறுதல்,பிரிதல், அழிதல், இரங்குதல். பரித்தல் = சூழ்தல். “குருதி பரிப்ப” (அகம். 31)

6

புரி - பரி - பரிசு வட்டக் கூடை யோடம் (coracle).

பரிசு - பரிசல் = கூடையோடம்.

பரி - பரிசை = வட்டக்கேடகம்.

பரி பரிதி = 1. வட்ட வடிவம். 2. கதிரவனை அல்லது நிலாவைச் - சூழ்ந்திருக்கும் கோட்டை (பரிவேடம்). 3. தேருருளை.