தனிச்சொற்கள்
4.
149
சக்கரப்படை. 5. சக்கரவாகப்புள். 6. வட்டமான கதிரவன். 7. கதிரொளி. 8. ஒளி. பரிதி பருதி.
-
ஆரிய வேள்வித் தீயைச் சுற்றிவைக்கப்படும் தருப்பைப் புல்லும், வடிவம்பற்றிப் பிற்காலத்திற் பரிதி யெனப்பட்டது.
பரிபுரம் = பெண்டிர் கணுக்காலைச் சுற்றியுள்ள சிலம்பணி.
பரியாள் - பரியாளம் = அரசனைச் சூழ்ந்து வரும் பரிவாரம். “பரியாள மடைந்ததே” (சீவக.949).
பரியாளன் = பரிவாரத்தைச் சேர்ந்தவன்.
பரிவட்டம் = 1. நிலாக்கோட்டை (ஊர்கோள்). 2. தொழ வரும் பெருமக்கட்குக் கோயில் மதிப்புறவாக (மரியாதையாக)த் தலையைச் சுற்றிக் கட்டும் தெய்வ ஆடை. 3. அதிகாரப் பதவிக்கு அடையாளமாக அரசன் அளிக்கும் நிலைக்குப்பாயம்.
பரிவட்டணை = யாழிசை யெழூஉம் எண்வகையுள் ஒன்று.
“பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
எண்வகையால் இசையெழீஇ’
வடமொழியில் வழங்கும் தமிழ்த்திரி சொற்கள்
புரி - pur, wall. rampart, fortress, city, town, R.V.
புரி - puri a town.
(சிலப். 7: 5- 8)
தமிழிற் புரம் என்பது கோபுரமுள்ள நகரையும், புரி என்பது கோட்டையுள்ள நகரையும் குறிக்கும். ஆயின். வடமொழியில் இவ் வேறுபாடின்மையால் புர, புரய என்னும் சொற்களும் கோட்டை அல்லது நகர் என்னும் பொதுப்பொருளே தரும்.
புரி என்பதன் திரிபான பரி என்னும் சொல், தமிழிற்போன்றே வடமொழியிலும் வட்டம் என்னும் அடிப்பொருனையும், முழுமை மிகுதி முதலிய வழிப்பொருள்களையும் உணர்த்தி, நூற்றுக் கணக்கான சொற்களின் முன்னொட்டாக வழங்கி வருகின்றது.
எ-டு:
பரி - பரீ - pari, pari, ind. round, around, about round, about. fully, abundantly, richly.
parinsa (பரிம்ச), the best part of, R.V.
parikāsana, frequent coughing.