இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தனிச்சொற்கள்
167
பால் என்னுஞ் சொல்லிற்குப் பகுதி, ஊழ் என்னும் இரு பொருள் இருப்பதுபோன்றே, பாக்கு என்னும் சொல்லிற்கும் இருத்தல் வேண்டும். “பலரறியார் பாக்கியத் தால்” என்னும் குறளடிக்கு (1141), “அந் நிலைபேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார்” என்று பரிமேலழகர் உரைத்திருப்பதை நோக்குக. அவர் தெய்வம் என்றது பால்வரை தெய்வத்தை.
“கிளைவயி னீக்கிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த விளைவையல் லால்விய வேனய வேன்தெய்வ மிக்கனவே’
(6)
“பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச் சூழுடை யாயத்தை
நீக்கும் விதி துணையா.
(7)
"சொற்பா லமுதிவள்.... நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று” (8)
என்று திருக்கோவை கூறுதலையுங் காண்க.
பத்தி (பக்தி) என்னுஞ் சொல்லிற்கு ஒருவன்பாற்பட்ட தன்மை
என்பதே மூலப்பொருள்.