உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

_

2. 3.

உள் - அள் - அழ - அழல் = 1. நெருப்பு. 2. வெப்பம். 3. எரிவு. 4. நரகம். 5. துளங்கொளி (கேட்டை). 6. செவ்வாய். 7. சினம்.

அழலவன் = 1. தீத்தெய்வம். 2. கதிரவன். 3. செவ்வாய்.

அழலுதல் = 1. எரிதல், 2. விளங்குதல், 3. காந்துதல், 4. சினத்தல். அழல் – அழற்று (பி.வி.), அழற்றுதல் = எரித்தல், வெம்மை செய்தல்.

அழல்- அழறு - அளறு = நரகம்.

“அண்ணாத்தல் செய்யாதளறு” என்னுங் குறளடியில் (255) ‘அளறு’ என்னும் சொல் ஏட்டுப் பிழையாகவும் இருக்கலாம்.

“பூரியர்கள்ஆழும் அளறு” என்னுங் குளறடி (919) சேற்று வடிவான நரக வகையென்று கொள்ள இடந்தரினும், நரகம் நெருப்புலக மென்றே பொதுவாகக் கொள்ளப்படுவதனாலும், அழல், எரி முதலிய பெயர்கள் லேயே

ஊற்றளவி

அதற்குண்மையாலும், நெருப்புத் துன்புறுத்துவதனாலும், அழறு என்னுஞ் சொல்லே அளறு என மருவிற்றென்றோ, ஏட்டுப் பிழையாக நேர்ந்ததென்றோ கொள்வது பொருத்தமானதே.

அழல்- அழலி = நெருப்பு. அழலித்தல் = எரிச்சல்.

அழல்- அழலை = தொண்டைக் கரகரப்பு.

அழல்- அழன் - அழனம் = 1. நெருப்பு. 2. வெம்மை.

66

_

'அழனம்மை நீக்குவிக்கும்” என்னும் தேவார (1225 : 4) அடியிலுள்ள 'அழனம்மை' என்னுந் தொடரை, அழன் + நம்மை என்றும் பிரிக்கலாம்.

அழன்- அழனி. ஒ. நோ : அழல் - அழலி, களன்- கழனி.

_

அழ - அக - அகை. அகைதல் = எரிதல். "அகையெரி யானாது” (கலித். 139 : 26). ஒ. நோ : மழ - மக.

_

அழனி- அகனி - வ. அக்நி (agni) – L. ignis. இதற்கு யாசுகர்(Yaskar) தம் நிருத்தத்திற் (Nirukta) கூறியிருக்கும் வேர்ப்பொருட் காரணங்கள் முற்றும் பொருந்தாப் பொய்த்தல் என்பதை அங்கு நோக்கிக் காண்க. புதுச்சேரி அரவிந்தர்தவநிலைய இருக்கு வேதப் பதிப்பு அகோ(ago) என்று மூலங்காட்டுவதும், முற்றும் தவறாம். இது சமற்கிருதத்தில் அஜ் என்றே

நிற்கும்.

உள்- உண்- உண்ணம் = வெப்பம். “உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு” (தேவா. 510 : 6).

உண்ணம் – வ. உஷ்ண. மராத். ஊன்.