தொகுதிச்சொற்கள்
187
உண் - உண. உணத்தல் = காய்தல். மிளகாய் உணந்துவிட்டது (உ.வ.). உணந்த மிளகாய் (உ.வ.) = மிளகாய் வற்றல்.
உ
உண - உணத்து (பி.வி.). உணத்துதல் = 1. காயப்போடுதல், நெல்லை உணத்தினார் (உ.வ.). 2. உடம்பை மெலிவித்தல் அல்லது வற்றவைத்தல். “மெய்யுணத்தலும்” (தைலவ. தைல. 110).
உண உணங்கு. உணங்குதல் = நெல் முதலியன காய்தல். “உணங்குணாக் கவரும்” (பட்டினப். 22). “தினைவிளைத்தார் முற்றந் தினையுணங்கும்” (தமிழ்நா. 154). 2. மெலிதல். “ஊட லுணங்க விடுவாரோடு” (குறள். 1310). 3. வாடுதல். “உணங்கிய சிந்தையீர்” (கந்தபு. மோன. 21). 4. சுருங்குதல். “உணங்கரும் புகழ்” (காஞ்சிப்பு. நாட்டுப். 1).
உணங்கு – உணங்கல் = 1. உலர்த்திய கூலம். “உணங்கல் கெடக் கழுதை யுதடாட்டங் கண்டென் பயன்” (திவ். திருவாய்.) 4 : 6 : 7). 2. 4 : 6 : வற்றல். "வெள்ளென் புணங்கலும்” (மணிமே. 16 : 67). 3. உலர்ந்த பூ (பிங்.).
உணங்கு உணக்கு (பி.வி.). உணக்குதல் “தொடிப்புழுதி கஃசா வுணக்கின்” (குறள். 1037). உணக்கு
கு - உணக்கம் வாட்டம்.
=
ம. உணக்கம், க. ஒணகிலு (g), து. ஒணகெலு.
உலர்த்துதல்.
உணக்கு = வாட்டம். 'உணக்கி லாததோர் வித்து” (திருவாச. 30 : 1).
க
உல் - உர் - உரு. உருத்தல் = 1. அழலுதல். 'ஆக முருப்ப நூறி" 'புறம். 25 : 10). 2. பெருஞ்சினங் கொள்ளுதல். "ஒரு பகலெல்லா முருத்தெழுந்து” (கலித். 39 : 23).
உரு - உருத்திரம் = பெருஞ்சினம். உருத்திரம்- வ. ருத்ர(d). 'திரம்’ ஒரு தொழிற்பண்பீறு. ஒ. நோ : மாத்தல் = அளத்தல்.
L மா + திரம் திரம் = மாத்திரம் (அளவு). அவன் எனக்கு எம்மாத்திரம்? என்னும் வழக்கை நோக்குக. மானம் (மா + அனம்) என்னும் அளவுப் பொதுப்பெயரையும், மா, அரைமா, (ஒருமா), இருமா, மாகாணி முதலிய அளவுச் சிறப்புப் பெயர்களையும், மேலை வ.ஆ. மாவட்டத்தில் படி என்னும் முகத்தலளவைப் பெயர் மானம் என்று வழங்குதலையும் நோக்குக. மாத்தல் என்னும் வினைச்சொல் பண்டே வழக்கிறந்தது. திரம் திரை. மா + திரை = மாத்திரை = அளவு, எழுத்தொலிக்குங் கால அளவு, உண்ணும் மருந்தளவு.
சினம் தீயொத்தலால், தீப் பற்றிய சொற்களெல்லாம் சினத்தையுங் குறிக்கும்.