உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) உருத்திரம்- வ. ரௌத்ர (raudra) = வெகுளி.

ஒ.நோ: E. wrath, n. anger, O.E. wrreththu, AS. and ON. wraedo, ME.

wrathe.

E. wroth, adj. angry. OE. wrath, OS. wreth, OHG. reid, ON. reithr. கீற்றும் (Skeat) கிளேனும் (Klein) இச் சொற்களை reid (twristed) என்னும் மூலத்தினின்று திரிக்கின்றனர். அது தென்சொல்லை அறியாமையாலும் இருக்கலாம்.

உரு - உரும் - உருமம் = 1. வெப்பம். 2. வெப்பம் மிக்க நண்பகல். உரும் - உருமி. உருமித்தல் = வெப்பமாதல், புழுங்குதல். உரும் - உரும்பு உரும்பு = 1. கொதிப்பு. 2. வெகுளி. “உரும்பில் கூற்றத் தன்னநின்” (பதிற்றுப். 26 : 13).

உரும்பு - உருப்பு = 1. வெப்பம். “கனமிசை யுருப்பிறக் கனைதுளி சிதறென” (கலித். 16 : 7). 2. சினத்தீ. “உருப்பற நிரப்பினை யாதலின்” (பதிற்றுப்.50:16). 3. கொடுமை. “உரும்பில் சுற்றமோடு”(பெரும்பாண்.

447).

உருப்பு- உருப்பம் = 1. வெப்பம். “கனலும்.... உருப்பமெழ” (அரிச். பு. விவா. 104). 2. சினம்.

உரு - உருகு. உருகுதல் = 1. வெப்பத்தால் இளகுதல், 2. மனம் நெகிழ்தல்.

உருகு- உருக்கம் = 1. இளக்கம். 2. மனநெகிழ்ச்சி. இரக்கம். உருகு-உருக்கு (பி.வி.). உருக்கு = உருக்கிய இரும்பு. உருக்குதல் = 1. இளக்குதல். 2. வாட்டுதல், மெலிவித்தல்.

உருக்கு- உருக்கன் = உடம்பை வாட்டும் நோய்.

உருக்கு-உருக்கி = 1. மாழை வகைகளை உருக்குபவன். 2. உடம்பை உருக்கும் நோய்.

உருக்காங்கல் = உருகிப் போன செங்கல்.

-

உல் – சுல் – சுல்லி = 1. அடுப்பு (திவா.). 2. மடைப்பள்ளி. (இலக். அக.). சுல்லி- வ. சுல்லீ(c).

_

சுல் - சுள். சுள்ளெனல் = வெயில் காய்தற் குறிப்பு, உறைத்தற் குறிப்பு. சுள் = கருவாடு (காய்ந்த மீன்). “சுள்ளினைக் கறித்தனர்” (கந்தபு. அசமுகி நகர். 18).