உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) சொல் - சொன்– சொன்னம் = விளங்கும் நிறப்பொன் (திவா.). - “சொன்னதானப் பயனெனச் சொல்லுவர்” (கம்பரா. சிறப்பு.).

சொன்னம்

வ. ஸுவர்ண = நன்னிறமுள்ளது, தங்கம். இது

பொருந்தப் பொய்த்தலான சொற்றிரிப்பு.

இனி, சூர் என்பதையே cur என்று திரித்து, சூர்ண (curna) என்னுஞ் சொல்லைத் தோற்றுவித்தனர்.

சூர் (cur) = எரி (to burn). சூர்ண- த. சூரணம் = நீறு, பொடி. சூரணம்- சூரணி. சூரணித்தல் = நீற்றுதல், பொடி செய்தல். ஒ.நோ : சுள் சுண்ணம். சுள்ளல்

சுள்ளம்

(வழக்கிறந்த வினைச்சொல்).

=

எரிதல்

இனி, சுள் என்னும் அடிபோன்றே குள், துள், நுள், புள், முள் என்னும் வழியடிகளும் உள் என்னும் மூல அடியினின்று திரிந்து, நெருப்புப் பற்றிய பல்வேறு சொற்களைப் பிறப்பிக்கும். அவையெல்லாம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் மேலையரும் ஒப்புமாறு ஐயந்திரிபற விளக்கப்படும். 'முதற்றாய் மொழி'யையும் பார்க்க.