உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

முப்பது முதலே” (நன். 59). 6. உயிர்வளி (பிராணவாயு). “வைகரியில்..... உயிரணைந்து வந்தமொழி” (சிவப்பிர. 2: 20). 7. காற்று (பிங்.). 8. ஓசை. “வள்ளுயிர்த் தெள்விளி” (குறிஞ்சிப். 100). 9. ஒரு கால அளவு. ஒரு நாழிகையில் 4320-ல் ஒரு கூறு. (கணக்கதி. ப. 14).

ம. உயிர், க. உசிர், தெ., து. உசுரு.

உயிர்த்தல் = (செ.கு.வி.) 1. உயிர்பெற்றெழுதல். 2. தொழிற்படுதல். “அவ் வுடலினின் றுயிர்ப்ப வைம்பொறிகள்” (சி.போ. 3 : 4), 3. மூச்செறிதல். “உரைதடு மாறா வுயிர்த்து” (பாரத. பதினெட். 173). 4. கமழ்தல். “உயிர்த்த தாமத்தன” (கம்பரா. நிகும். 114). 5. இறுதி மூச்சு விடுதல், இறத்தல். “உயிர்ப்பது மோம்பி” (சீவக. 1989).

(செ. குன்றா வி.) 1. ஈனுதல். “குழந்தையை யுயிர்த்த மலடிக் குவமை கொண்டாள்”(கம்பரா. உருக்காட். 65). 2. மோத்தல். “கண்டுகேட் டுண்டுயிர்த்துற்றறியு மைம்புலனும்” (குறள். 1101). 3. கூறுதல், பேசுதல், “விட்டுயிர்த் தழுங்கினும்” (தொல். களவு. 20). 4. பெருக்குதல். “அம்மூ வாறு முயிரொடு முயிர்ப்ப” (நேமிநா. 3, உரை). 5. வெளிப்படுத்துதல். "கொங்குயிர்த்த பூந்தடத்துலாய்” (நைடத. நாட்டு. 3).

=

உயிர்ப்பு 1. உயிர்த்தெழுகை. 2. சோர்வு நீங்கிப் புது வலிமையடைகை. 3. மூச்சு. “ஊனினுயிர்ப்பை யொடுக்கி” (தேவா. 1173 :3). 4. தெய்வப் படிமையிலுள்ள தெய்வ ஆற்றலை வருவிக்கை. 5. காற்று. “ஒல்லென வீழ்வுறு முயிர்ப்பின் காவலன்” (கந்தபு. திருவவ. 13). 6. நறுமணம். "உயிர்க்குமெல் லுயிர்ப்பெதி ரோடி” (பாரத குருகுல. 91). 7. இளைப்பாறுகை. “நின்னுயவு நோய்க் குயிர்ப்பாகி” (கலித். 35).

உய்- வ. அய்–அய செல்கை.

=

=

அய அயந செல்கை, நடக்கை, சாலை, பாதை (இருக்கு வேதம்)

உத்தர + அயந = உத்தராயந = கதிரவன் வடசெலவு.

தக்ஷிண + அயந = தக்ஷிணாயந = கதிரவன் தென்செலவு.

T

உய் - இய் -இயல். இயலுதல் = 1. நடத்தல். "அரிவையொடு மென்மெல வியலி” (ஐங்குறு. 175). 2. உலாவுதல். 'பீலி மஞ்ஞையி னியலி” (பெரும்பாண். 31). 3. இயங்குதல், அசைதல். 4. அணுகுதல். 'திருந்தடி நூபுர மார்ப்ப வியலி” (கலித். 83 : 16). 6. உடன்படுதல். (கலித்.83:16).