தனிச்சொற்கள்தனிச்சொற்கள்
15
‘யாதுநீ கருதிற் றன்ன தியன்றனன்” (ஞானவா. வைராக். 42). 7. பொருந்துதல். "வெயிலியல் வெஞ்சுரம்” (W.). 8. தங்குதல். "மாவியல் கின்ற வீர மகேந்திர புரத்துக்கு” (கந்தபு. ஏமகூ. 4). 9. நேர்தல். 'இயன்றதென் பொருட்டினா லிவ்விட ருனக்கு” (கம்பரா. குகப். 40). 10. செய்யப்படுதல். “சிறியவர்கட் கெற்றா லியன்றதோ நா” (நாலடி. 353). 11. கூடியதாதல். “இயல்வது கரவேல்” (ஆத்திசூடி).
6
இயல் = 1. செலவு. “புள்ளியற் கலிமா” (தொல். பொருள். 194). 2. ஒழுக்கம் (சூடா.). 3. ஒப்பு. “மின்னி யற்சடை மாதவர்” (திருவிளை. குண்டோ. 2). 4. தன்மை. “ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅது’” (புறம். 25:2). 5. இயற்கை. 6. இயற்றமிழ் (பிங்.). 7. நூல். “இயலோதேல்” (சைவச. பொது. 346). 8. நூற்பகுதி. அரசியல் (குறள்).
இயல் - இயல்வு = 1. இயற்கை. 2. ஒன்றைப் பெறுவதற்கேற்ற ஆம்புடை (உபாயம்). “ஏனமாய் நின்றார்க் கியல்வு” (திவ். இயற். 1 : 12).
6
இயல் - இயல்பு = 1. தன்மை. “இயல்புகாண் டோற்றி மாய்கை” (சி.சி. 1 : 3). 2. நற்குணம். “ஏதிலா ரென்பா ரியல்பில்லார்” (நான்மணி. 44). 3. ஒழுக்கம். “சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்’” (குறிஞ்சிப். 15). 4. முறை. “இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன்” (குறள். 47). 5. வரலாறு. “உலகீன்றா டக்கன் மகளா யுதித்த வியல்பும்” (கூர்மபு. திருக்கலி. 1).
இயல்
—
இயற்கை
=
1. தன்மை. “எண்ணாராத் துயர்விளைக்கு மிவையென்ன வுலகியற்கை” (திவ். திருவாய். 4 : 9 : 1). 2. இலக்கணம். “பிரமசாரி யியற்கையைத் தெரித்த வாறும்” (கூர்மபு. அநுக்கி. 23). 3. நிலைமை. வறுமையான இயற்கை (W.). 4. கொள்கை. “பெரியவ ரியற்கை” (கம்பரா. அயோத். மந்திர. 63). 5. வழக்கம். “உலகத் தியற்கை யறிந்து செயல்’” (குறள். 637). 6. இயல்பான உலக முதல் கருப்பொருள்கள்.
_
இயல் - இயற்று (பி.வி.) இயற்றுதல் = 1. நடத்துதல். “நெஞ்சே யியற்றுவா யெம்மொடு” (திவ். இயற். பெரிய திருவந். 1). 2. செய்தல். “இசையா தெனினு மியற்றியோ ராற்றால்” (நாலடி. 194). 3. படைத்தல். கெடுக வுலகியற்றி யான்” (குறள். 1062). 4. நூல்செய்தல். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள். ப 5. தேடுதல். “ஒண்பொருள் காழ்ப்ப
வியற்றியார்க்கு” (குறள். 760).