தனிச்சொற்கள்
6
27
நுருள் - நெருள்- நெருடு. நெருடுதல் = நூலை உருட்டித் திரித்தல். "இழைநக்கி நூனெருடு மேழை யறிவேனோ’ (தமிழ்நா.).
_
_
புருள் - புருளை - புருடை – பிருடை = யாழின் அல்லது நரப்புக் கருவியின் முறுக்காணி.
தெ. பிரட, க.பிரடெ.
முருள் - முருடு = உருண்ட முண்டு அல்லது முடிச்சுக் கட்டை.
உருள் - உருட்டு. உருட்டுதல் = 1. உருண்டையாகச் செய்தல். ‘முருடீர்ந்துருட்டற்கு’” (கம்பரா. மாரீசன். 139) 2. உருளச் செய்தல். “அறக்கதிராழி திறப்பட வுருட்டி” (மணிமே. 5 : 76). 3. மருட்டுதல். “கடபட வென்றுருட்டு தற்கோ” (தாயு. நின்ற. 3).
க., ம. உருட்டு.
உருட்டு = 1. சரிவு. 2. வளைவு. 3. சக்கரம். “உருட்டோட வோடிய தேர்” (குலோத். கோ. 212). 4. மோதிரவகை. 5. உருண்டையான பொருள். 6. திரட்சி. 7. உருட்டுகை. 8. ஏமாற்றுகை. 9. வெருட்டு.
உர்- உறு- இறு- இற. இறத்தல் = சாய்தல், சரிதல்.
இற - இறப்பு = இறவாணம். இறவாரம். “இறப்பிற் றுயின்று’” (திருக்கோ. 328).
இற - இறவு = 1. (வளைந்த) இறா. “கடலிறவின் சூடு தின்றும்” (பட்டினப். 63). 2. (வட்டமான) தேன்கூடு. (ஞானவா. தாசூர. 69). இற இறா இறால். "கயலொடு பச்சிறாப் பிறழும்” (பெரும்பாண். 270)
=
இறா- இறால் = 1. இறா. 2. தேன்கூடு (நள. கலிநீங். 14). 3. நளி (கார்த்திகை) (திவா.).
இறா- இறாட்டு = 1. இறால். 2. தேன்கூடு. 3. கையிறாட்டை. இறாட்டு- இறாட்டை = நூல் நூற்கும் சக்கரம்.
இறாட்டு-இறாட்டினம் = 1. நூற்கும் சக்கரம். 2 நீரிறைக்கும் உருளி. 3. விளையாட்டுச் சுழல் தேர் அல்லது குடை. 4. பஞ்சரைக்கும் பொறி. இறவு- இறகு- சிறகு- சிறகர். இறகு- இறகர். இறகு-இறக்கை. தெ. ரெக்க.