உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

29

4. அரத்தம்

நிறப் பெயர்கள் பொதுவாகப் பொருள் பண்பு வினை என்னும் மூவடிப்படையில் தோன்றியுள்ளன. அவற்றுள் முதலதே பெரும்

பான்மை.

டூ: ash,gold, lead, olive, orange, slate, snuff.

அரத்தம், களிப்பாக்கு, சாம்பல், பவழம், பால், பொன், மயில்.

நெருப்பு, எரியும் பொதுநிலையிற் சிவப்பாகவும், ஒளிரும் சுடர்நிலையில் வெள்ளையாகவும், தோன்றுவதால், நெருப்புக் கருத்தினின்று செம்மைக் கருத்தும் வெண்மைக் கருத்தும் தோன்றியுள்ளன. கதிரவன், இளவெயில் வீசும் விடிகாலையிற் பவளம்போற் சிவந்தும், முதிர்வெயி லெறிக்கும் நண்பகலில் வெள்ளிபோல் வெளுத்தும் தோன்றுதல் காண்க.

அழல்வண்ணன் என்பது சிவனையும், எரிமலர் என்பது செந்தாமரை மலரையும் முண்முருங்கை மலரையும், செந்நிறம் பற்றிக் குறிக்கின்றன. இந் நிறக்கருத்து நெருப்புக் கருத்தினின்றே தோன்றுவதால், அழல், எரி என்னும் பெயர்களின் மூலச் சொற்களும் இக் கருத்தைத் தெரிவிக்கின்றன.

உல்

_

உல

உலவை = காய்ந்த மரக்கிளை. இலைதீந்த வுலவையால்” (கலித். II)

உல் - உலர். உலர்தல் = 1. காய்தல். 2. வாடுதல். “உலர்ந்து போனே னுடையானே” (திருவாச. 32: 1). ம. உலர்.

உலர்ச்சி- ம. உலர்ச்ச.

6

உலத்தல் = அழிதல், சாதல், முடிவுபெறுதல், கழிதல், நீங்குதல். உல் உலை = 1. கொல்லன் எரிக்கும் அடுப்பு. "கொல்ல னுலையூதுந் தீயேபோல்" (நாலடி. 298). 2. உணவு சமைக்கும் பொருட்டுக் கொதிக்க வைக்கும் நீர். "உலைப்பெய் தடுவது போலுந் துயர்” (நாலடி. 114).