30
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)
உல்- உர்- உரி = நெருப்பு. க. உரி.
உர்- உரு. உருத்தல் (செ. கு. வி.) = 1. எரிதல், அழலுதல். “ “ஆக முருப்பநூறி” (புறம். 23: 10). 2. வெகுளுதல், பெருஞ்சினங் கொள்ளுதல். “ஒருபக லெல்லா முருத்தெழுந்து" (கலித். 39 : 23) - (செ. குன்றாவி.) வெகுளுதல். “ஒள்வாட் டானை யுருத்தெழுந் தன்று” (பு. வெ. 3:2).
சினத்தல் எரிதல் போன்றது.
–
உரு- உருத்திரம் = சினம். உருத்திரம் – வ. ருத்ர(rudra). OE. wreth, OS. wreth, OHG. reid, ON. reithr, E. wrath, wroth.
உருத்திரம்- உருத்திரன் = கடுஞ்சினத்தன்.
உருத்திரன்- வ. ருத்ர(rudra).
தமிழரின் முத்தொழிலோனான சிவன் ஆரியரின் முத்திரு மேனியருள் (திரிமூர்த்திகளுள்) ஒருவனான அழிப்புத் தொழிலோ னாக்கப்பட்டபின், ஆரியக் கடுங்காற்றுத் தெய்வ (storm god) மாகிய ருத்ர (உருத்திரன்) அழிப்புத் தொழிலொப்புமைபற்றிச் சிவனோடு இணைக்கப்பட்டான். ருத்ர ஆரியத் தெய்வமாயினும், வடமொழி தமிழின் திரிமொழி யாதலின், திரிசொல்லாலேயே குறிக்கப்பட்டான் என அறிக.
தமிழ்த்
உரு - உரும் - உருமி - உருமித்தல் = வெப்பமாதல்.
உரும் - உருமம் = 1. வெப்பம் (பிங்.). 2. உருமிக்கும் நண்பகல். “உருமத்திற் கதிரே” (சேதுபு. இராமனருச். 218).
ருமவிடுதி (யாழ்ப்.) = நண்பகல் வேலைநிறுத்தம்.
உருமகாலம் = கோடைக்காலம்.
உருமத்துக்கு விடுதல் நண்பகலில் வேலை நிறுத்துதல்.
உரும் - உரும்பு (பதிற்றுப். 26 : 13).
=
கொதிப்பு. 'உரும்பில் கூற்றத் தன்னநின்”
உரும்பு- உருப்பு = 1. வெப்பம். "கன்மிசை யுருப்பிறக் கனைதுனி சிதறென” (கலித். 16 : 7). 2. சினத்தீ. “உருப்பற நிரப்பினை யாதலின்” (பதிற்றுப். 50:16). 3. கொடுமை. "உருப்பில் சுற்றமோடிருந்தோற் குறுகி” (பெரும்பாண். 417).
=
6
உருப்பு- உருப்பம் = 1. வெப்பம். “கனலும்..... வந்து குடிகொண் வுருப்பமெழ” (அரிச். பு. விவா. 104).
டவணுறைந்தன 2. சினம். (W.).