46
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) காட்டும். தவறான வழியைக் கையாளின் எவ் வினையும் வெற்றியாய்
முடியாது.
கால்டுவெல் தமிழ்நாட்டின் இருண்ட காலத்தில் வந்ததனால், தமிழர் வெளிநாட்டினின்று வந்தேறிகள் என்றும், திரவிட மொழி சித்தியத்திற்கு இனமென்றும், தவறாக முடிபு செய்துவிட்டார். இந்தைரோப்பிய மொழிகளின் அடிப்படை தமிழே. அவற்றின் கொடுமுடியே சமற்கிருதம். ஆகவே, ஐரோப்பிய மொழியமைப்பின் அல்லது வரலாற்றின் திறவுகோல் தமிழிலேயே ஆழப்புதைந்து கிடக்கின்றது. இதைக் கண்டுபிடிக்கும்வரை, மேலையர்மொழியாராய்ச்சி யெல்லாம் விழலுக்கு நீரிறைத்தலும் வானத்து மீனுக்கு வன்றூண்டி லிடுதலுமே யாகும்.
தமிழரின் முன்னோர் மாந்தன் பிறந்தகமாகிய குமரிநாட்டில் தோன்றியவர். தமிழ் வடக்கே சென்று திரவிடமாய்த் திரிந்தது. திரவிடம் வடமேற்கிற் சென்று ஆரியமாக மாறிற்று. அவ் வாரியம் ஐரோப்பாவின் வடமேற் கோடியை முட்டித் தென்கிழக்காகத் திரும்பி இந்தியா என்னும் நாவலந்தேயம் வந்து சேர்ந்தது.
ஆதலால், பல அடிப்படைத் தமிழ்ச்சொற்கள் தியூத்தானி யத்தில் தமிழுக்கு நெருங்கியும், இலத்தீனில் சற்றுத் திரிந்தும், கிரேக்கத்தில் அதினும் மிகத் திரிந்தும், வேதமொழியிலும் சமற்கிருதத்திலும் மிகமிகத் திரிந்தும், உள்ளன.
எ-டு: தமிழ்
அகரம்
(மருதநிலம்,
மருத நிலத்தூர்)
உகை
-
அகை
(செலுத்து)
கும் (கூடு)
மன்
முழுகு
வலி (வலம்)
ஆங்கிலம்
இலத்தீன
வேதமொழி
கிரேக்கம்
அல்லது
சமற்கிருதம்
OSax. akkar ME. aker E. acker
L. ager
Gk. agros
ajras (field)
G.ago
aj (to drive)
L. cum Gk. sum
man
L. mergo L. valeo
sam
majj bala