உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

47

வல்லின மெய்யெழுத்துகளுள், எடுப்பிலா(voiceless) வொலிகளே எடுப்பொலிகளினும் முந்தியவை. தமிழில் தனி அல்லது இயற்கை யெடுப்பொலிகள் இல்லை; மெல்லின மெய்யொடு கூடிய செயற்கை யெடுப்பொலிகளே யுள. தமிழ் எடுப்பிலா வொலிகள் திரவிடத்திலேயே எடுப்பொலிகளாகத் திரிந்து விடுகின்றன.

எ-டு:

தமிழ்

குடி (வீடு, கோயில்)

தெலுங்கு

கும்பு (கூடு)

gudi gumpu

ஆதலால், ஆரியத் திரிபைப்பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை.

காண் என்பதன் திரிசொற்கள், இலத்தீன கிரேக்கத்தில் எடுப்பொலியோடும் தியூத்தானியத்தில் எடுப்பிலா வொலியொடும் இருத்தல், முன்னவற்றினும் பின்னவை தமிழுக்கு நெருக்கமாயிருத்தலை யுணர்த்துதல் காண்க.

கால்டுவெலார்,

தொல்காப்பியமும்

பத்துப்பாட்டு எட்டுத்தொகைகளும் தமிழர்க்கும் தெரியாது மறைந்து கிடந்த காலத்தில், வழிகாட்டியுமின்றித் தன்னந் தனிமையாய் ஆராய்ந்த போதும், தமிழின் தொன்மை முன்மைகளையும் மூலத் தன்மையை யும் உணர்ந்து, தம் திரவிட ஒப்பியலிலக்கண நூலின் இறுதியில், சொல்லியல் உறவுகள் (Glossarial Affinities) என்னும் பகுதியில், கீழ் வருமாறு வரைந்துள்ளார்:

“kan, the eye; kān (in the preterite kandu), to see; also secondarily, to mark, to consider, to think. In the latter sense it comes kannu in Tamil, but the base remains unchanged. In (kanu, kannu) Telugu, the ordinary n, the nasal of the dental row, is used instead of n. the cerebral nasal. Comp. the Welsh ceniaw, to see; English ken, view, power of reach of vision, to ken, to know by sight. In “Webster's English - Dictionary” kanna was said to be ‘an eye' in Sanskrit; whereas it is exclusively a Dravidian word. This error may be compared with Klaproth's representing kuruta, blind, as a Sanskrit word, instead of referring it to the Dravidian languages, to which alone it belongs. There is a curious word in Sanskrit kāṇa, one-eyed, which seems to have some Dravidian relationship. It becomes in Bengali kāṇā, blind which, in form at least, is identical with the Dravidian negative kāṇā, that sees not. Possibly the Dravidian kān, to see, kannu, to consider, may have some ulterior connection with the Gothic kunn-an, to know; Greek gnō-nai; Sans. ña; Latin gna (gnarus); Old High German chann. The different shades of meaning