48
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) which are attributed to Greek to gnō-nai and eide-nai; seem to corroborate this supposition; for the latter is represented as meaning to know by reflection, to know absolutely, whereas the former means to perceive, to mark, and may therefore have an ulterior connection with the Dravidian root.”
- Caldwell's Dravidian Comparative Grammar, University Edition, p. 591.
தமிழ் வளர்ச்சி தடுக்கப்பட்டிருந்த கடந்த மூவாயிரமாண்டுக் காலத்தில், ஆரியப் பூசாரிகளான வடமொழியாளர், ஜ்ஞா என்னுந் திரி சொல்லினின்று பின்வருமாறு சொற்களை ஆக்கிக்
கொண்டனர்.
1) முன்னொட்டுப் பெறாதவை
ஏராளமான
ஜ்ஞாத்வ, ஜ்ஞாப்தி, ஜ்ஞாதி, ஜ்ஞாத்ரு, ஜ்ஞாதேய, ஜ்ஞாத்ர, ஜ்ஞாந, ஜ்ஞாநி, ஜ்ஞாபக, ஜ்ஞேய முதலியன.
2) முன்னொட்டுப் பெற்றவை
அஜ்ஞா, அஜ்ஞாதி, அஜ்ஞாந, அஜ்ஞாநி, அஜ்ஞேய, அநுஜ்ஞப்தி, அனுஜ்ஞா, அநுஜ்ஞாந, அநுஜ்ஞாபக, அநுஜ்ஞாபந, ஆஜ்ஞா, ஆஜ்ஞாப்தி, ஆஜ்ஞாத்ரு, ஆஜ்ஞாபந, ப்ரஜ்ஞா, ப்ரஜ்ஞ, ப்ரஜ்ஞாத்ரு, ப்ரஜ்ஞாந, ப்ரஜ்ஞாபந, ப்ரதிஜ்ஞா, ப்ரதிஜ்ஞாந, ப்ரதிஜ்ஞேய, விஜ்ஞா, விஜ்ஞாந, விஜ்ஞாநி, விஜ்ஞாபக, விஜ்ஞாபந, விஜ்ஞாப்தி, விஜ்ஞேய, ஸம்ஜ்ஞா, ஸம்ஜ்ஞாபந, ஸம்ஜ்ஞாந, ஸம்ஜ்ஞாநி முதலியன.
இவை ஒரு பருக்கை அல்லது ஓரரிசிப் பதம். இவற்றினின்று ஏனைச் சொற்பெருக்கத்தையும் உய்த்துணர்ந்து கொள்க. இங்ஙனம் வடமொழியை வளர்த்துக்கொள்ளுதற்கு ஊணுடை முதலிய வாழ்க்கைப் பொருள்களெல்லாம் வரையாது வழங்கிய வள்ளல்கள், மேலையாரியத் திரிபாகிய வேதமொழியையும் அதனொடு தமிழைச் சேர்த்து வளர்த்த சமற்கிருதத்தையும் தேவமொழியென்றும், அதனைப் போற்றுவதால் மண்ணுலகமே வீட்டுலகமாய் மாறிவிடு மென்றும், குருட்டுத்தனமாய் நம்பிய பேதை மூவேந்தரே.
தமிழகத்திற்கு வேதமொழியோ சமற்கிருதமோ எள்ளளவுந் தேவையில்லை. ஆயினும் சமற்கிருதத்தை வளர்த்தது, தமிழை வீழ்த்தற்கும் நாளடைவில் அதனை ஒழித்தற்குமே என்பதை அறிதல் வேண்டும். தமிழகம் சிவமதமும் திருமால் மதமும் தோன்றிய நாடாயிருந்தும், இன்றும் திருக்கோயில் வழிபாடு வடமொழியி