தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) வெப்பம், சூடு.
56
காய்
காய்கை
―
காகை
காங்கை காங்
=
திருச்சிராப்பள்ளியைவிட மதுரை காங்கையான இடம்.
தெ. காக (kāka), க. காங்கெ(kānke).
காய்-வ. காச்(kās).
ய- ச, போலி. எ-டு : இயை- இசை, நெய்வு- நெசவு,
நேயம் - நேசம், வாயில் – வாசல்.
_
இங்ஙனம் யகர சகரப் போலியால், ஒளி வீசுதலைக் குறிக்கும் காய் என்னும் தென்சொல் வடமொழியில் காச் (kās) என்று திரிந்துள்ளது. வடமொழியில் இச் சொல்லிற்கு வேரில்லாம லிருப்பதுடன், இதிலுள்ள சகரம் தமிழ்ச் சகரமாயிருப்பதும், கவனிக்கத்தக்கது. ‘ப்ர’ என்னும் முன்னொட்டுப் பெற்று, இச் சொல் ‘ப்ரகாச்’ என்று பெரிதும் வழங்குகின்றது.
காய் - காய்ச்சல் = 1. வெயில், வெப்பம். 2. சுரநோய். 3. உலர்ச்சி. புதுநெல்லை இரண்டு காய்ச்சல் போட்டுக் குத்த வேண்டும். 4. மனவெரிச்சல், பொறாமை.
காய்ச்சுக் கட்டி = இளநீரிற் பாக்கு நறுமணச் சரக்குகள் முதலியன சேர்த்துக் காய்ச்சிய துவர்க்கட்டி.
காய்ச்சுக் கட்டி- காசுக் கட்டி.
•
9
காய் காயம் = 1. குழம்பில் வெந்த கறித்துண்டு. "நெய்கனி குறும்பூழ் காய மாக” (குறுந். 389). 2. உறைப்பு (பிங்.). 3. மிளகு. “காயத்தின் குழம்பு தீற்றி” (சீவக. 788). 4. கறிக் கூட்டுச் சரக்கு. “காயங்களான் இனிய சுவைத்தாக்கி” (குறள். 233, பரி. உரை). 5. வெள்ளுள்ளி. “காயமுங் கரும்பும்” (சிலப். 23 :45). 6. பெருங்காயம். 7. கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம் ஆகிய ஐங்காயம் (தைலவ. தைல. 135). 8. காய மருந்து.
ம. காயம், தெ. காயமு.
காய மருந்து = கருவுயிர்த்தவளுக்குக் கொடுக்கும் காரமருந்து.
_
காய் - காய்து – காய்ந்து - காந்து. ஒ.நோ : வேய்- வேய்ந்தான்– வேய்ந்தன் – வேந்தன் = முதற் காலத்தில் முடியணியும் உரிமையைச் சிறப்பாகக் கொண்ட பேரரசன். கொன்றை வேய்ந்தான் - கொன்றை வேய்ந்தன்- கொன்றை வேந்தன் = கொன்றைமாலையணிந்த சிவன்.
காந்துதல் = (செ. கு. வி.) 1. திகழ்தல் (பிரகாசித்தல்) “பரம்பிற் காந்து மினமணி” (கம்பரா. நாட்டுப். 7). 2. வெப்பங் கொள்ளுதல். 3.