தனிச்சொற்கள்
57
கருகுதல். சோறு காந்திப் போயிற்று. 4. எரிவெடுத்தல். புண் மருந்து காந்துகின்றது. 5. மனங்கொதித்தல். "புத்திபோய்க் காந்துகின்றது’ (கம்பரா. சடாயுகா. 37). 6. பொறாமை கொள்ளுதல். மூத்த குடியாள் இளைய குடியாளைக் கண்டு காந்துகிறாள் - (செ. குன்றா வி.) 1. சுடவைத்தல் (யாழ்ப்.). 2. சுவறச் செய்தல் (யாழ்ப்.). 3. சினத்தல். "காந்தி மலைக்குத்து மால்யானை” (வள்ளுவமாலை, 11).
-
காந்து – காந்தல் - காந்தள் = 1. விளக்கெரிவது போல் விளங்கித் தோன்றும் கோடற்பூ (கார்த்திகைப் பூ). 2. காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுதலைக் கூறும் புறத்துறை. “வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும்” (தொல். புறத். 5). 3. முருகனுக்குச் சிறப்பாக வுரிய காந்தளைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை.
"கருங்கடலுள் மாத்தடிந்தான்
செழுங்காந்தட் சிறப்புரைத்தன்று”
காந்து- காந்தாளம் = சினம் (W.).
(பு. வெ. 6 : 9)
காந்து- காந்தாளிகம் = சின்னி (Indian shrubby copper leaf).
காந்து – காந்தி = 1. ஒளி (சூடா.). 2. அழகு (பிங்.). 3. ஒளிக்கதிர் (W.). 4. வெப்பம். (மூ. அக.). 5. காவிக்கல் (W.).
காந்து– காந்துகம் = வெண்காந்தள்.
காந்தள் என்பது முதலிற் செங்காந்தளைக் குறித்துப் பின்னர் இரு காந்தட்கும் பொதுவாகி யிருக்கலாம். சேயோனான முருகனுக்குச் செங்காந்தளே சிறப்பாக ஏற்கும்.
காந்து – L. candeo, to glow with heat, to shine, glitter, to be of a shining white.
ம
இலத்தீன் வினைச்சொற்களைத் தன்மை யொருமையீறாகிய ‘o’ அல்லது நிகழ்கால வினையெச்ச வீறாகிய ‘re’ சேர்த்துக் குறிப்பது மரபு. இவற்றை நீக்கின், எஞ்சி நிற்பது வினை முதனிலையென அறிக.
L. candela, a wax or tallow candle, AS. candel, OE. candel, AN., OF. candel()e, E. candle (f. candere, to glow), cylinder of wax, tallow spermaceti, etc., enclosing wick, for giving light.
L. candidus, shining white, white, candidum, n. white colour, a. honest, straight forward. E. candid, white, fair, sincere, honest, E. candescent, glowing with white heat, f. L. candeseere, f. candere, be white.
L. candidatus, clothed in white; a candidate for office, who among the Romans was always clothed in white, for the consulship. E. candidate,