58
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) one who offers himself or is put forward to be elected to an office, orig. white- robed.
L. candor, whiteness, sincerity, E. candour, open-mindedness, frankness, impartiality.
E. chandler, dealer in candles. ME., AF. chandeler, OF. chandelier f. L. candela.
இலத்தீனில் தகரமுதற் சொல்லாயிருந்தது, பிற்காலத்தில் ஆங்கிலப் பிரெஞ்சு மொழியிலும் இடையாங்கிலத்திலும் சகரமுதற் சொல்லாகத் திரிந்துவிட்டமையை நோக்குக. இச் சகரமுதற் சொல்லே வேத மொழியிலும் சமற்கிருதத்திலும் முதலுயிர் குறுகியும் குறுகாதும் உள்ளது. Skt. cand, to shine, be bright; to gladden.
canda, the moon, L.
candaka, pleasing, W.; the moon W., moon light, W.
candira, the moon, Bhām, ii, 120.
candra, glittering, shining (as gold), having the brilliancy or hue of light (said of gods, of water (RV. X. 121, 9; TS. VI) & of Soma), RV.; VS., TS. VI; TBr. I; m. the moon.
cāndra, lunar.
scand, to shine.
scandra, shining, radiant.
இங்ஙனம் திகழ்தலையும் திகழும் திங்களையும் குறிக்கும் வடசொற்கள், காந்து என்னும் தென்சொல்லை அடிமூலமாகவும், இலத்தீன் வழியாக வந்த திரிசொல்லை நேர்மூலமாகவும், கொண்டனவா யிருத்தல் காண்க.
ஒ. நோ : திகழ் – திங்கள், தகம் – தங்கம். ‘திகள்' என்னும் வடிவம் இறந்துபட்டது. புரள்- பிரள்- பிறழ் என்னும் திரிபில் இடைப்படுசொல் இறந்துபட்டமை காண்க.
தகுதல் = எரிதல், விளங்குதல், தகதக வென்று சொலிக்கிறது என்னும் வழக்கை நோக்குக. ஆரியர் வருகைக்கு முற்பட்ட பழம்பாண்டி நாடும் தனித்தமிழிலக்கியமும் முற்றும் மறைந்து போனமையால், பல ணைப்பண்டுச் சொற்களை இன்று காட்ட இயலவில்லை யென்பதை
அறிக.