60
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)
திரண்ட குச்சையும் ("கோலாடக் குரங்காடும்.”), திரண்ட தடியையும் (“கோற்கண்ண ளாகுங் குனிந்து” - நாலடி. 17), திரண்ட கம்பையும் (கோல் வலித்தல் = தண்டால் ஓடந்தள்ளுதல்), திரண்ட கழுவையும் ("வேன்மழுக் கடைத்தலைக் கழுக்கோல்” - திருவாலவா. 39 : 19), கோல் என்னுஞ் சொல் குறிக்கும்.
பந்தலைத் தாங்கும் கால்களாகக் கம்புகளான கோல்களையே நடுவர். தூண்போலத் தாங்கியாகும்போது பொருள் மாறுவதால், அம் மாற்றத்தைக் குறிக்கக் கோல் என்பது கால் என்று திரியும் சொல்லாக்கத்தில் ஆகாரம் ஓகாரமாகத் திரிவது பன்மொழிப் பொதுநெறி. எ -டு : ஓட்டம் (ஒப்பு)- ஆட்டம். கோணம் (வளைந்த காய்ப்பயறு) - காணம், நோடு நாடு (நோட்டம் - நாட்டம்). E. holy day - holiday, fourteen night - fortnight, co-relation correlation.
-
கால்
=
-
(பெ.) 1. பந்தல் தாங்குங் கம்பு. “வந்த வேலையை விட்டுவிட்டுப் பந்தற்காலைப் பிடித்தானாம் (பழ.) 2. மண்டபந் தாங்கும் தூண். நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம். 3. விழாத் தொடக்கத்திற்கு அடையாளமாகப் பந்தற்கால் போல் நட்டுங்கோல் (கம்பு). கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி” (சிலப். 5 : 144) 4. இவர்கொடிகள் பற்றுக்கோடு (LIT.) 5. மண்டபக் கால்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு. மாந்தன் இரு காலுயிரி. 6. முழங்கால். 7. உடம்பில் நாலிலொரு பங்கான முழங்கால் போன்ற காற்பகுதி.
பற்றும்
ஒ.நோ : அரு - அரை = கழுத்திற்குக் கீழ்ப்பட்ட வுடம்பில் அருகிய (சிறுத்த) இடம், உடம்பில் அரைபோற் பாதியளவு.
-
=
இடு இடை கழுத்திற்குக் கீழ் இடுகிய (ஓடுங்கிய) இடம், உடம்பில் இடைபோல் நடுவிடம்.
66
8. பாதம். “காலிற்குப் போடச் செருப்பில்லை யென்பார்க்கும்” (தனிப்பா). 9. நெசவுத்தறியின் கான்மிதி. 'காஞ்சிபுரம் போனால் காலாட்டிக் கொண்டு சாப்பிடலாம்” (பழ.). 10. காலால் நடக்கும் நடை. காறூய்மை யில்லாக் கலிமாவும்” (திரிகடு. 46). 11. நடையால் அமையும் பாதை (பிங்.). 12. கால்போற் கட்டிலைத் தாங்கும் உறுப்பு. கட்டிற் கால்போல நால்வர். 13. வண்டிக்குக் கால்போன்ற சக்கரம். 14. சக்கரமுள்ள வண்டி. “கலத்தினுங் காலினும்” (சிலப். 2 : 7). 15. தேர்ச் சக்கரம். கடலோடா கால்வ னெடுந்தேர்’(குறள். 495). 16. பூவின் தாள். "திரள்கால்... அலரி” (குறள். 199). 17. குடையைத் தாங்கும் பிடி. குடைக்கால்போல்” (நாலடி. 368). 18. கால்போல் தாங்கும் வாசல்நிலை. வாசற்கால். 19. வாசற்கால் போன்ற எழுத்து
66