தனிச்சொற்கள்
61
வரி. “புள்ளியை இக் காலத்தார்காலாக எழுதினார்” (தொல். எழுத்து. 17. உரை). 20. கால்போன்ற அடிப்பாகம். “களைகால் கழாலின்” (புறம். 120 : 5). 21.மூலம், பிறப்பிடம். “மணிக்கா லறிஞர்” (கல்லா. முரு.). 22. வில்லின் அடி, குதை, முனை. “ஒருதனு விருகால் வளைய” (தேவா. 142: 14). 23.அடிநிலம். நாற்றங்கால், பள்ளக்கால். 24. இடம். "புனல்கால் கழீஇய பொழில்” (பெரும்பாண். 380). 25. இடப்பொருளுருபு “கண்கால் கடை இடை தலைவாய் திசைவயின்” (நன். 302) “ ஊர்க்கால் நிவந்த” (சங். நமச். உரை). 26. கால்போன்ற சடைப்பிரிவு. இரண்டுகாற் பின்னல், இரட்டைக்காற் சடை. பிரிவு. "தேசிக்குரிய கால்களும்” (சிலப். 3 : 16, 3:16, உரை). 27. இனமுறை, இரண்டாங் கால்முறை. 28. குடும்பம், சரவடி. இனவழி, “பழைய காலைத்தூர்க்காதே, புதுக்காலை வெட்டாதே” (பழ.). 29. கால்போல் ஊன்றும் ஆலவிழுது. “கான்மரம்” (திவா.). 30. கால்போல் ஊன்றும் மழைப்பெயல். மழைகால் ஊன்றிவிட்டது. 31. கால்போல் நீண்டு விழும் சுடர்க்கதிர் “நிலாக்கால் விழுந்தனைய (மீனாட். பிள்ளைத். ஊசற்.1). 32. கால்போல் நீண்டு செல்லும் நீர்க்கால் “சரயுவும் பலகாலி னோடியும்” (கம்பரா. நாட்டுப். 60) வாய்க்கால், கால்வாய், கழிக்கால், ஆற்றுக்கால், வெள்ளக்கால், பள்ளக்கால். 33. நீண்டு வீசுங் காற்று. “கால்கடிப் பாகக் கடலொலித் தாங்கு” (பதிற்றுப். 68.1) 34. ஊதை நோய் (வாதரோகம்) "காற்கானோய் காட்டி” (372). 35. ஐம்பூதம். “காலெனப் பாகென” (பரிபா. 3:77). 36. எல்லையின்றி நீண்டு செல்லும் நேரம் (பிங்.). 37. செவ்வி. “கான்மலியும் நறுந்தெரியல் (பு.வெ.8: 18). 38. தடவை. “சென்றே யெறிப வொருகால்” (நாலடி. 24) 39. ஒரு வினையெச்சவீறு. “பழவினை வந்தடைந்தக்கால்” (நாலடி. 123).
.
கால் (leg)- ம., க. கால், தெ., து. காலு. ஒ.நோ: Gk. skelos, leg. கால் (காற்று) - தெ. காலி (g) - E. gale, very strong wind. Norw. galen, lead weather.கால் - காற்று.
கால் (நேரம்) - ம. கால்.
.
66
"
கால் (வி.) காலுதல் = 1. (செ. கு.வி.) கால் நீளுதல் அல்லது ஊன்றுதல் போற் சிந்துதல். 2. வெளிப்படுதல். உருமு கான்றென்னப் பல்லியங்களு மார்த்தன” (கந்தபு. முதனாட். 3). 3. பாய்தல். விடர்கா லருவி வியன்மலை” (சிறுபாண். 170) - (செ. குன்றா வி.) 1. கக்குதல் (திவா.). ம. கால்குக. 2. தோற்றுவித்தல் “பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி” (பெரும்பாண். 2)