உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

69

8. கும்மல்

உம் - கும். கும்முதல் = கூடுதல், மிகுதல், திரள்தல், நிறைதல்.

கூடுதற் கருத்தினின்று குவிதற் கருத்தும்; குவிதற் கருத்தினின்று கூம்புதல், மூடுதல், மறைதல், அடக்கமாதல், அமைதியாதல், குறைதல் முதலிய கருத்துகளும் பிறக்கும்.

இக்கருத்துகளில் தோன்றும் வினைச்சொற்கள், செயப்படு பொருள் குன்றிய வினையாகவும் குன்றா வினையாகவு மிருக்கும்.

கூடுதல் வினை, காட்சிப் பொருளதும் கருத்துப் பொருளது மாகப் பல திறந்தது.

கும் - கும்மல் = 1. அரிசி, உப்பு, காய்கறி முதலிய பொருள் களின் குவியல். சந்தையிற் காய்கறிகளைக் கும்மல் கும்மலாகக் குவித்து வைத்திருப்பார்கள். 2. மக்கட் கூட்டம், கும்பல்.

கும்மல் - கும்மலி = பருத்தவள் (யாழ்ப்.).

கும்மிருட்டு = திணிந்த இருட்டு, காரிருள்.

கும் - கம் - கமம் = நிறைவு. “கமம்நிறைந் தியலும்’” (தொல். உரி. 57).

கம் - கம. கமத்தல் = நிறைதல். “கமந்த மாதிரக் காவலர்” (கம்பரா. மிதிலைக். 132).

கும் குமு- குமுக்கு = 1. கூட்டம் (இ.வ.) 2. பெருந்தொகை. (W.)3 மொத்தம். பண்டங்களை யெல்லாம் குமுக்காய் வாங்கினான் (W.) கும்மெனல் = மணம் வீசுதல்.

"கொண்டைமலரே கும்கும் கும்என்னக்

கோயம்புத்தூர் நாடி நடந்துவா பின்கூடி’

"

(நாடோடிப்பாட்டு)

குமுகுமெனல் = மணம் வீசுதற் குறிப்பு. “மணந்தான் குமுகுமென் றடிக்க வில்லை” (தனிப்பா. 1, 389 : 44)