தனிச்சொற்கள்
73
கும் - கும்மி = 1. கை குவித்தடித்தல். 2. அங்ஙனம் அடித்தாடும் விளையாட்டு. 3. அவ் விளையாட்டுப் பாட்டு.
ம. கும்மி. தெ. கொப்பி (gobbi).
கும் - கொம்
- கொம் - கொம்மை. கொம்மை கொட்டுதல் = கை தட்டி யழைத்தல், கும்மியடித்தல்.
கும் - கும்பு கும்பு - கும்பிடு. கும்பிடுதல் = கைகுவித்து வணக்கஞ் செய்தல். ம. கும்பிடு.
கும்பிடு - கும்பீடு= கைகுவிக்கும் வணக்கம்.
கும்பு - கூம்பு. கூம்புதல் = 1. குவிதல். “செய்ய கமலமலர்கூம்ப” (நைடத. சந்திரோ. 2.)2. ஒடுங்குதல். 3. ஊக்கங் குறைதல். “வடவர் வாடக் குடவர் கூம்ப” (பட்டினப். 276).
ம.கூம்பு.
கூம்பு
=
1. பூமொட்டு. “தாழைக் கூம்பவிழ்ந்த வொண்பூ” (ஐந். ஐம். 49). 2. தேர்மொட்டு (திவா.). 3. கப்பற் பாய்மரம். “கூம்பு முதன் முறிய வீங்குபிணி யவிழ்ந்து” (மணிமே. 4: 30).
ம. கூம்பு, க. கூவே.
கூம்பு - கூப்பு. கூப்புதல் = குவித்தல். "காலையு மாலையுங் கைகூப்பிக் கால்தொழுதால்” (தனிப்பா).
கும்
-
குமுது
—
=
குமுதம் கதிரொளியிற் கூம்புவதாகச் சொல்லப்படும் ஆம்பல். கும்முதல் = கூடுதல், குவிதல்.
குமுதம் - வ. குமுத.
வடமொழியாளர் குமுதம் என்னும் சொல்லை வடசொல் லாகக் காட்டல் வேண்டி, அதைக் கு+முத என்று பிரித்து, “என்ன மகிழ்ச்சி!” என்னும் உணர்ச்சி யூட்டுவதாகப் (exciting what joy!)பொருட்கரணியங் கூறுவர். அவர் சொற்பொருள் கொண்ட வகை வருமாறு :
கூ (ஒரு வினாச்சொல்) - கு = எவ்வாறு (how), முத= மகிழ்ச்சி (Joy). குமுதத்தின் மறுபெயரான ஆம்பல் என்னுஞ் சொல்லும், தமிழ்ப் பொருட்கரணியத்தையே வலியுறுத்தும்.
அம்பல் பேரரும்பு. அம்பல் பேரரும்புபோற் குவியும் மலர்.
ஆம்பல் கதிரொளியிற்