74
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) கும்முதல் குவிதல், மூடுதல், அடைத்தல், ஒலிகுறைதல், ஒளிகுறைதல்.
கும் - கம். கம்மெனல் = ஓசையடங்கற் குறிப்பு. “கானமுங் கம்மென் றன்றே” (நற். 154). கூடத்திலுள்ள வாசல் பலகணிகளையெல்லாம் அடைத்துவிட்டால், உள்ளே கம்மென்றிருக்கும் (உ.வ.).
கம்மென் றிரு = பேசாது அமைதியாயிரு.
கம்முதல் = 1. குரல் குன்றுதல். “மென்குரல் கம்மாமே” (குமர. பிர. முத்துக். 18) 2. ஒளி குறைதல்.
கம் - கம்மல் = 1. குரலடைப்பு, தொண்டைக்கம்மல். 2. விளைச்சற் குறைவு. பயிர் கம்மலாய்ப் போயிற்று. 3. விலைக் குறைவு. விலை கம்மலாயிருக்கிறது (W.) .
.
கம் கம்மி = குறைவு. பத்துரூபா கம்மியா யிருக்கிறது.
-
கம்மி
—
உ. கமீ.
மூடுதற் கருத்தினின்று மறைப்பு, அடக்கம், மருமம் ஆகிய
கருத்துகள் தோன்றும்.
கும் - குமு - குமு - குமுக்கு - கமுக்கு - கமுக்கம் = மரும வடக்கம். “மூடிக்கொண்டிருந்தால் கமுக்கம், திறந்தால் வெட்டவெளி”(பழ.). அவரை அந்தப் பதவிக்கு அமர்த்தினதைச் செய்தித்தாளில் வெளிவரும் வரை கமுக்கமாய் வைத்திருந்தார்கள்.
கமுக்கக்காரன் = அடக்கமுள்ளவன்.
கும் - கும்பு - கும்பம்
=
குவிந்து திரண்டிருக்கும் கலம். 2. கும்ப வடிவான மேற்கட்டடம் (dome ). 3. கும்பம் போன்ற யானை மண்டை. 4. கும்பவோரை. 5. கும்பமாதம் (மாசி).
கும்பம் - வ. கும்ப (kumpha).
கும்பாபிஷேகம் என்னும் வடசொல்லைக் கும்பமுழுக்கு என்றே சொல்லலாம்; குடமுழுக்கு என்று சொல்லவேண்டிய தில்லை.
கும்பம் - கும்பா = அரைக் கும்பவடிவான மாழை யுண்கலம்.
கும்பக் குடம் = தேரின் முடி.
கூடு என்னும் வினையின் நிகழ்கால வெச்சம் (Infinitive mood) உடன், ஒடு, ஓடு என்னும் கருவி (3ஆம்) வேற்றுமை யுருபுகள்போல் உடனிகழ்ச்சிப் பொருள் தரும்.