உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

75

எ-டு: நாய்கூட (நாயொடு) நம்பி வந்தான். தந்தைகூட (தந்தையொடு) மகனும் பாடினான்.

கும் என்னும் வினை கூடு என்பதன் ஒப்பொருட் சொல் (Synonym)லாதலால், கும்ம என்னும் நிகழ்கால வினையெச்சம் கூட (with, together, together with) என்பதுபோல உடனிகழ்ச்சிப் பொருள் தரல் வேண்டும்.

கும்மல் (குவியல்)–L.cumulus, a heap, pile, mass, L.cumulo, to heap

up.

ஆங்கிலம் cumulus என்னும் இலத்தீன் சொல்லினின்று cumulate (கும்மலிடு)என்னும் வினைச்சொல்லைத் தோற்றுவிக்கும். அதினின்று accumulate (ad+ cumulate) என்னும் வினைச்சொல் எழும்.

cumulus என்னுஞ் சொல்லின் அடியான cum என்பது, இலத்தீனில் உடனிகழ்ச்சிப் பொருள் முன்னொட்டாகப் (pref.) பெருவழக்காய் வழங்குகின்றது.

எ டு: cum bona venia

=

with your kind indulgence.

cum grana salis

=

with a grain of salt.

cum multis aliis with many other things.

cum notis variorum with notes of various (critics).

=

cum privlleglo = with privilege.

cum என்னும் இலத்தீன் முன்னொட்டு, முதற்கண் com என்று திரிந்து, பின்னர் வருஞ்சொல் முதலெழுத்திற்கேற்ப con, co, cor என்றும் வேறுபடுகின்றது.

எ-டு: combustum, commodus,

communico, compendium;

concretus, condemno, confero, conservus;

collabor, collega; corrector, corruptus.

ஆங்கிலத்தில் நூற்றுமேனி நாற்பான் சொற்கள் இலத்தீனாத லால், com, con, col, cor என்னும் முன்னொட்டுகளைக் கொண்ட சொற்கள் ஏராளமாய் வழங்குவதைக் காணலாம்.

எ டு: combine, commence, compose, communicate;

concord, condole, confuse, console;

collect, college; correspond, corrode

com என்னும் இலத்தீன் முன்னொட்டு, co என்றும் குறுகி, இலத்தீனிற் சில குறிப்பிட்ட எழுத்துகட்கு முன்னும், ஆங்கிலத்தில் எல்லா எழுத்துக்கட்கு முனனும் வழங்கும்.