உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

76

co - pref. L. short form of com

-

-

(cum prep. with) used in L. only before vowels, h, gr, and (in the correct classical form) n, but in E. as living pref. before any letter' என்று The Concise Oxford Dictionary கூறுதல் காண்க. எ- டு: இலத்தீன். coarguo, cognosco, cohabitare.

ஆங்கிலம் co - adjust, co - education, co - operate, coheir,

copartner, co

-

religionist, co

-

tenant, co

-

worker.

உடனிகழ்ச்சிப் பொருளுணர்த்தும் கும் (cum) என்னும் இலத்தீன் முன்னொட்டு, கிரேக்கத்தில் சும் (sum) என்று திரிந்துள்ளது. அதை ஆங்கிலர்சிம் (sym) என்று திரித்து வழங்கி வந்திருக்கின்றனர். அத் திரிபும், syn, syl என்று வருஞ்சொன் முதலிற்கேற்ப வேறுபடும்.

எ -டு : symbol (sumbolon), sympathy (sumpatheia), symphony (sumphonia), symposium (sumposion), symptom (sumpotma);

synagogue (sunagoge), syndic (sundikos), synonym (sunonumon), syntax (suntaxis), synthesis (sunthesis);

syllable (sullabe), syllepsis (sullepsis), syllogism (sullogismos).

சும் (ஸும்)என்னும் கிரேக்க உடனிகழ்ச்சிப் பொருள் முன்னொட்டு, கிரேக்க நாட்டிற்குக் கிழக்கில் தோன்றிய கீழை யாரியத்தில் ஸம் (sam ) என்று திரிந்துள்ளது.

இங்குக் கீழையாரியம் என்றது, வேத ஆரியரின் முன்னோர், இந்தியாவிற்கு வருமுன் ஈரானுக்கும் காந்தாரத்திற்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் வதிந்திருந்தபோது வழங்கிவந்த மொழியாகும்.

உடன் (கூட), உடன் கூடிய, கலந்த, கலந்து, நிறைவாக என்று பொருள்படும் ஸம் என்னும் முன்னொட்டைப் பெற்ற முதன்மை யான சொற்கள், இன்று சமற்கிருதத்தில் நூற்றுக் கணக்காக வுள்ளன.

எ-டு : ஸம்க்யா, ஸம்க்ரக, ஸம்க்ராந்தி, ஸம்க்ருத, ஸம்க, ஸம்கட, ஸம்கதி, ஸம்கம, ஸம்கர, ஸம்கல்ப, ஸம்கீத, ஸம்கீர்த்தந, ஸம்கீரண, ஸம்சர், ஸம்சித,ஸம்ஜீவிந், ஸம்தர்ப, ஸம்தாந, ஸம்தோஷ, ஸம்ந்யாஸ, ஸம்பத், ஸம்பந்த, ஸம்பவ, ஸம்பார, ஸம்பாவந, ஸம்பாஷண, ஸம்ப்ரத, ஸம்ப்ரதாய, ஸம்ப்ரதாந, ஸம்ப்ரோக்ஷண, ஸம்பூர்ண, ஸம்போக, ஸம்போதந, ஸம்மதி, ஸம்மேளந, ஸம்யுக்த, ஸம்யோக, ஸம்ரக்ஷண, ஸம்வத்ஸர, ஸம்வாத, ஸமஷ்டி, ஸமய, ஸமர்ப்பண, ஸமஸ்த, ஸமாஸ, ஸமாச்சார, ஸமுச்சய, ஸமுதாய, ஸமூஹ, ஸமேத, ஸம்ஸ்க்ருத, ஸம்ஸ்கார, ஸம்ஜ்ஞா, ஸம்ஸ்தாந, ஸம்ஸார, ஸம்ஹார ஸம்ஹிதா.

ஸம் என்னும் முன்னொட்டு ஸஹ என்றும் திரியும்.