தனிச்சொற்கள்
ஒ.நோ : ஸஹகமந, ஸஹோதர.
ஸம் என்னும் முன்னொட்டு ‘ஸ’ என்றும் குறுகும்.
எ -டு: ஸகல (சகளன்) = உருவத் திருமேனி.
77
இங்ஙனம், கும் என்னும் தென்சொல், ஆரிய மொழிகளில் முறையே, கும் - கம், கம் - கன் - கோ, கும் ஸும், ஸும் - ஸம் - ஸ என்று திரிந்துள்ளது.
ஆங்கிலம் கும் என்பதைக் கம் என்று ஒலி திரித்தும் வரி(எழுத்து) திரிக்காது, இன்றும் இணைப்புச் சொல்லாக (conjunction) வழங்கி வருகின்றது.
எ-டு : pension -cum- provident fund.
agriculture - cum - industry.
ஸம் என்னும் முன்னொட்டு சமற்கிருதத்திற் போன்றே வேதமொழியிலும் பெருவழக்காக வுள்ளது. மேலையாரியமும் பிராகிருதமுங் கலந்தது வேதமொழி யென்றும், வேதமொழியும் தமிழுங் கலந்தது சமற்கிருதமென்றும் வேறுபாடு அறிதல் வேண்டும். இவ் விரு மொழியும் ஒருகாலும் வழங்கியிராத இலக்கிய மொழிகளே.
ஸம் என்னும் முன்னொட்டை நீக்கிவிடின், நூற்றுக்கணக்கான முதன்மைச் சொற்கள் வடமொழியி லிரா. அவை நீங்கின், வேதமொழியும் சமற்கிருத மொழியும் மொழியென்னுந் தகுதி யின்றி, இருபெருஞ் சொற்றொகுதிகளாகவே முடியும்.
ஸம்ஸ்க்ருதம் என்னும் பெயரே, ஸம் என்னும் முன்னொட் டால் ஏற்பட்டதே. வேதமொழியுந் தமிழுங் கலந்து செய்யப்பட்டது என்னும் பொருளில், அம் மொழி அப் பெயர் பெற்றது. ஸம் - உடன், கலந்து. க்ருத = செய்யப்பட்டது தமிழையும் ஒரு பிராகிருதமாகக் கொண்டு அதைக் ‘த்ராவிடீ ப்ராக்ருத்' என்பர் வடமொழியாளர். ப்ரா = முந்தி, முந்திச் செய்யப்பட்டது பிராகிருதம்; பிந்திக் கலந்து செய்யப்பட்டது சமற்கிருதம். ஸம்க்ருத என்றாலே போதும். பிற்காலத்தில் ‘ஸ்’ என்னும் எழுத்தை இடைச்செருகி ஸம்ஸ்க்ருத என்றனர்.
மேல் வரைந்த கும் என்னுஞ் சொல் தென்மொழியின் (தமிழின்) முன்மையையும் பின்மையையும் தெற்றெனத் தெரிந்து கொள்க.
வரலாற்றினின்று வடமொழியின்