உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

தமிழ் வளம் தமிழ்ச்சங்கம் என்றும், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் என்றும், சென்னைத் தமிழ்ச்சங்கம் என்றும், பிறவாறும், ஆரிய அடிப் படையிலும் குல வடிப்படையிலும் இட வடிப்படையிலும் மத வடிப் படையிலும் பல கழகங்கள் தோன்றி மொழியடிப்படையில் தமிழ் முன் னேற்ற மடையாவாறு தாமே முட்டுக் கட்டையிட்டுக் கொண்டுள்ளன.

இனி, இக் குறைகளை நீக்கி நிறைவுபெறத் தோன்றிய தமிழகப் புலவர் குழுவும், முதலிரு தமிழ்க்கழகம் போல் பற்றும் மூப்பும் புலமை யும் ஒருங்கேயுடைய புலவரை யெல்லாம் கொள்ளாது, கடைக் கழகத் தின் இறுதிக்காலப் புலவரின் தொகையையே அடிப்படையாகக் கொண்டு, ஏழேழ் வகைப்பட்ட இளைஞரும் முதியருமான பலதிறத் தமிழறிஞரையே கொண்டுள்ளது.

பண்டைக் கடைத் தமிழ்க் கழகமும் நிறைபுலமையடிப்படையிலன்றி, இயற்றமிழ்ப் புலவர் எழுவர், இசைத்தமிழ்ப் புலவர் எழுவர் முத் தமிழ்ப் புலவர் எழுவர், இருமொழிப் புலவர் எழுவர் என்றோ அந்தணப் புலவர் எழுவர், அரசப்புலவர் எழுவர், வணிகப் புலவர் எழுவர், வேளாளப் புலவர் எழுவர், வேட்டுவப் புலவர் எழுவர், இடைப்புலவர் எழுவர், நுளைப்புலவர் எழுவர், என்றோ; சிவனியப் புலவர் எழுவர், திருமாலியப் புலவர் எழுவர், சமணப் புலவர் எழுவர், புத்தப் புலவர் எழுவர், அளவை மதப்புலவர் எழுவர், உலகமதப் புலவர் எழுவர், மதமிலாப் புலவர் எழுவர், என்றோ; பாண்டிநாட்டுப் புலவர் எழுவர், சோழநாட்டுப் புலவர் எழுவர், சேரநாட்டுப் புலவர் எழுவர், கொங்குநாட்டுப் புலவர் எழுவர் தொண்டைநாட்டுப் புலவர் எழுவர், கருநட நாட்டுப்புலவர் எழுவர், வடுகநாட்டுப் புலவர் எழுவர், என்றோ; புலவர் நாற்பத்தொன்பதின்மரைக் கொண்டிருந்ததில்லை. மேலும், கடைக்கழகம் ஒன்றே இறுதியில் நாற்பத்தொன்பான் புலவரைக் கொண்டிருந்தது. தலைக்கழகப் புலவர் தொகை 549; இடைக்கழகப் புலவர் தொகை 59.

முக் கழகத்திலும் உறுப்பினர் தொகை ஒருபோதும் வரையறுக்கப் படவில்லை. அவ்வப்போது புதுப் புலவர் வரினும் தகுதிபற்றிச் சேர்க்கப் பட்டனர். இதையே, கழகப் பலகை தகுந்த புலவரடுப்பின் தானே ஒரு முழம் நீண்டு இடங்கொடுக்கும் என்பது தெரிவிக்கும்.

பற்றும் மூப்பும் புலமையும் ஒருங்கேயுடைய தமிழ்ப் புலவரெல்லாம் தமிழகப் புலவர் குழுவில் இடம்பெற வில்லை. அதன் உறுப்பினரெல் லாரும் இம்முத் தகுதியும் உடையவருமல்லர். ஒரு சிலர் தமிழுக்கு மாறாகப் பேசியும் எழுதியும் வருவதும் வெளிப்படை. தனித் தமிழ்ப் பெயர் தாங்கவோ தூய தமிழிற் பேசவோ பலர்க்கு ஆற்றலுமில்லை; விருப்பமுமில்லை. இதுவரை நடைபெற்ற எத்தனையோ கூட்டங்களுள் ஒன்றிலேனும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலிச் சீர்திருத்தம் பற்றித் தீர்மானம் நிறைவேற்றப்படவுமில்லை. சூழ்வுக் கூட்டங்களில் இயன்றவரையிலேனும் தனித்தமிழ்நடை கையாளப் பெறுவதுமில்லை; அக் குறிக்கோளுமில்லை.

இனி, சென்னையையும் புதுவையையும் தலைநகராகக் கொண்ட இற்றைத் தமிழ்நாடுகள் இரண்டிற்கும் பொதுவாக, ஒரே, உண்மையான, நிலையான, அஞ்சாத, தன்னலமற்ற, பல்துறையுந் தழுவிய, முழுப் பொறுப்பேற்ற தமிழ்