உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்குழுவும் உட்பகையும் கொல் குறும்பும்

லீ

91

நிறுவனம் இருத்தல் வேண்டும். அதுவே, வேண்டும். அதுவே, உலகத் தமிழ்க் கழகம். இனிமேல் இந்தியெதிர்ப்புப் பற்றியோ, தமிழ்வளர்ச்சி பற்றியோ, வேறு எவ்வமைப்பும் ஏற்படவோ முயற்சியி லீடுபடவோ வேண்டியதில்லை. அத்தகைய நோக்கமுள்ளவ ரெல்லாரும் இதிற் சேர்ந்துகொள்ளலாம். உட்பகை எல்லாத் துறையிலும் இன்று தமிழுக்கு மாறாக நின்று அதைப் பகைவர்க்குக் காட்டிக்கொடுக்கும் உட்பகையார், பேராயக் கட்சியாரும் வையா புரிகளும் என இரு சாரார். பேராயக் கட்சி தமிழ்நாட்டில் தமிழுக்கு மாறாகவே தோன்றிற்று. அதைத் தோற்றுவித்தவர் சமற்கிருத வெறியரான ஆரியரே. தமிழையும் அதன் இலக்கியத்தையும் தமிழ் நாகரிகப் பண்பாட்டையும் தமிழர் வரலாற்றையும் அறியாதவரும், தமிழ்ப்பற்றும். தமிழ் இனப்பற்றும் இல்லாதவரும், ஆகிய தந்நலத் தமிழரையும் தமிழ் இளைஞரையும், பேராயக் கட்சியின் ஆரியத் தன்மையை மறைக்கவே அதன் (ஆரியத்) தலைவர் துணைவராகவும் தொண்டராகவும் சேர்த்துக்கொண்டனர். ஆங் கிலேயரால் தமிழர்க்குச் சில சிறு தீங்குகள் நேர்ந்தனவேனும், அவரால் விளைந்த பல்வேறு நன்மைகள் அவற்றை எளிதாய் மறைக்கவும் மறப்பிக்கவும் வல்ல மாபெரு மாண்புடையனவாகும். இதையறியாதார் வரலாற்றறிவில்லாதாரே.

அனைத்திந்தியப் பேராயக் கட்சியைத் தோற்றுவித்தவர் இயூம் (Hume) என்னும் ஆங்கிலரே. இந்தியரைப் படிப்படியாகத் தம்மாட் சிக்குத் தகுதிப்படுத்தி வந்த ஆங்கிலர், தாமாகவே இந்திய ஆட்சியை இந்தியரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லவிருந்தனர். அவரை விரைந்து விரட்டியதே பேராயத்தார் செய்த செயல். அதனால் விளைந்த

விளைவே சீனத் தாக்குதலும் பாக்கித்தான் போரும் மொழிச் சிக்கலும். ஆங்கிலர் நீங்கினபின், காந்தியடிகள் பேராயத்தைக் கலைக்கச் சொல்லி யும் தந்நலத் தலைவர் கலைத்திலர்.

தமிழ்நாட்டுப் பேராயக் கட்சியைத் தோற்றுவித்த ஆரியத் தலை வருள் மாபெரும்பாலார் மறைந்துவிட்டனர். இரண்டொருவர் இன்றுமி ருப்பினும் அக் கட்சியைவிட்டு விலகியுள்ளனர். ஆகவே தலைமைப் பதவிக்கு முழு வாய்ப்புபெற்ற தந்நலத் தமிழரே இன்றும் அக்கட்சியில் ஒட்டிக்கொண்டு தமிழைக் காட்டிக் கொடுத்து வருகின்றனர்.

இந் நிலையில், ஆங்கிலர் காலத்திலும் அதன் பின்பும் நீண்ட காலமாகத் திரவிடர் கழகத்திலும் திரவிட முன்னேற்றக் கழகத்திலும் துணைத்தலைவராக விருந்து, தமிழுக்கு உண்மையான தொண்டு செய்து வந்த தூயதமிழரான பாவலர் கண்ணதாசனாரும் திரு. சம்பத்தும், திடுமென்று ஏற்பட்ட கட்சிப் பிணக்கினால் வேறொரு தமிழ்க் கட்சியேற் படுத்துவதாக விலகிக்கொண்டு, பேராயக்கட்சியிற் சேர்ந்து, குளித்தபின் சாய்கடையில் விழுவதுபோலும், உடன்பிறந்தார் மீதுள்ள பகையாற் பெற்ற தாயைக் கொல்வதுபோலும், தமிழுக்குக் கேடானவற்றைச் செய்துவருவது மிகமிக வருந்தத்தக்கதாகும். தி.மு.க.வை வெறுப்பது குற்றமன்று; அதற்கு மாறாக வேலை செய்வதும் குற்றமன்று. தமிழை வெறுப்பதும் அதற்கு (தமிழுக்கு) மாறாக இந்தியை ஏற்பதுமே குற்றமாம். ஆதலால், இருவரும் விரைந்து பேராயக் கட்சியினின்று வெளியேறித்