உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

தமிழ் வளம் தமிழ்க்கட்சி தோற்று வித்து வெற்றிபெறுக. இடையிட்டுத் தம் குருதியிற் படித்த கறையைப் போக்கி, இறுதிக் காலத்திலேனும் தனித்தமிழ்த் தொண்டாற்றித் தம் தூய தமிழப் பிறப்பை நிலை நிறுத்துக.

பேராயக்கட்சி யாட்சியில் தமிழைக் காட்டிக்கொடுத்துத் தழைத் தோங்கிய வையாபுரியார், இன்றும் தம் பதவி நீங்காதிருப்பதும் தன்மை மாறாதிருப்பதும், இற்றையாட்சியால் ஏற்பட்டதே. ஏற்பட்டதே. எதிர் காலத்தில் தமிழாட்சி ஏற்படும்போது, அவர் தமிழைக் காட்டிக்கொடுத்து ஈட்டிய தும் ஈட்டுகின்றதும் ஈட்டுவதுமான பொருளெல்லாம் பறிமுதல் செய்யப் படும் என்பதை அறிவாராக.

கொல் குறும்பு :

இன்று தமிழுக்குக் கொல்குறும்பாகவிருந்து ஊறுசெய்வார், தமிழை வெறுக்கும் பிராமணரும், இந்தியை இந்தியப் பொதுமொழியாக்க முனையும் மொழி வெறியரும், தென்னிந்திய இந்தி பரப்பற் கழகத் தாருமாவர்.

கடந்த மூவாயிரமாண்டாக ஆரியச் சூழ்ச்சி வெற்றிபெற்று வந்தி ருப்பினும், இனிமேல் அது செல்லாதவாறு தமிழர் கண் திறக்கப்பட்டி ருப்பதை யுணர்ந்து, தமிழ்நாட்டுப் பிராமணர் ஊரொடு நாட்டொடு ஒத்துவாழ்ந்து, "பிராமணனுக்குப் பின்மதி (புத்தி)" என்னும் பழமொ ழியை மெய்ப்பியாதிருப்பா ராக. தமிழே தம் தாய்மொழியென வுணர்ந்து அதற்குத் தக அதனைப் போற்றிக் காப்பாராக.

தமிழைச் சமற்கிருதக் கிளை மொழியாகக் காட்டும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலியைத் திருத்தி வெளியிடின், இந்தி வெறியர் செருக்கெல்லாம் சூறாவளிப் பூளைபோல் மாய்ந்துவிடும். ஆயினும், இதை எத்துணையோமுறை எடுத்துச் சொல்லியும் நடுவணரசு தமிழின் பெருமையை யும் தலைமையையும் அறியும்வரை, தமிழ் நாட்டுத் தேசியப் படைமாணிப் பயிற்சியில் இந்தி யேவற் சொற்களை எவ்வகைய பிலேனும் வற்புறுத்தத்தான் செய்யுமென்பதை, இற்றைத் தி.மு.க. அரசு அறிதல் வேண்டும். மண்டெரி வாய் மடுப்பினும் கண்டு யிலும் மாசுணம்போற் கவலைகொள்ளாதிருக்கின்றது இற்றைத் தமிழ் நாட்டரசு. தமிழாட்சி வரும்வரை இத் திரவிட ஆட்சி இங்ஙன்தான் இருக்கும் போலும்!

"

சென்னையிலுள்ள தென்னிந்திய இந்தி பரப்பற் கழகப் பூனை சென்ற இந்தியெதிர்ப்பிற் சூடு கண்டும், இன்னும் தன் நிலைமையை உணராதிருக்கின்றது. தென்னிந்திய மொழிகளில் தேர்வுகளை வடநாட்டி லும் தென்னாட்டிலும் நடத்திவிட்டால், தமிழர் இந்தியெதிர்ப்பு அடி யோடு நின்றுவிடும் என்று அது கனாக் காண்கின்றது. "ஆடு நனைகிற தென்று ஓநாய் அழுததாம்". தமிழர் தமிழை ஊக்கவில்லையென்று தமிழை ஒழிக்கக் கருதும் இந்தி பரப்பற் கழகம் மிகவும் கவல்கின்றது. இத்தகைய குருட்டுச் சூழ்ச்சிகளை அறவே விட்டுவிட்டுத் தமிழாட்சி வந்து கோடையிடி போற் குமுறி யிடிக்குமுன், தன் கடையைக் கட்டிச் சுருட்டிக்கொண்டு வடநாடு சென்று அங்குத் தமிழைப் பரப்பத் திட்ட மிடுவதாக. அது தமிழ்நாட்டில் இருக்கும்வரை தமிழுக்குப் புற்றுநோய் பரப்பியாகக் கருதப்படுமென்பதையும், அறிவதாக.